பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 கும்பகோணத்தில் காஞ்சி காமகோடி மடம் கும்பகோணத்தில் மடம் ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் ஐந்தனுள் தமக்கு உரிமையாகக் காமகோடி பீடத்தைக் காஞ்சியில் அமைத்துக்கொண்டார் என்று கூறுவர். தஞ்சை மராட்டிய மன்னர்களில் 1739 முதல் 1763 வரை அரசாண்டவர் பிரதாப சிங்கர். இவர் காலத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் உடையார் பாளையத்தில் தங்கியிருந்தார். இதனைக் கேள்வியுற்ற பிரதாபசிங்கர் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளைத் தஞ்சைக்கு வருமாறு வேண்டினார். காவிரிக் கரையில் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்பிய காமகோடி பீடாதிபதிகள் கும்பகோணத்துக்கு வந்தார்." பிராதாபசிங்கரும் கும்பகோணத்தில் டபீர் அக்ரஹாரத்தில் மடத்தைக் கட்டிக்கொடுத்தார்; 'மோகினி " நிலங்கள் அளித்தார்; அரியணையும் வெள்ளி தங்கம் ஆகியவற்றால் ஆகிய பாத்திரங் களும், அணிகலன்களும், குதிரையானை முதலியனவும் அளித்தார். இவை சிவாஜி மகாராஜாவுக்கு (கி. பி. 1851இல்) கும்பகோணத்தி னின்று சிலர் எழுதிய கடிதத்தினின்று பெறப்படும்.' மொயின் பெற்றமை பிரதாபசிங்கர் காலத்திலிருந்தே சங்கராசாரியருடைய மடத்துச் சந்திர மெளலீசுவரர் பூசைக்கு மராட்டிய மன்னர் பெருந்தொகைகள் கொடுத்து வந்தனர் ஆதல்கூடும். கி.பி. 1768இல் சக். 1000+2000:1; 1780இல் மொயின் 4500 சக்கரம் ஆஷாட சுத்த பெளர்ணமி வியாஸபூசைக்குச் சக்கரம் 500 ; 1786இல் சக். மொயின் 4600"; கி. பி. 1786இல் 4500 சக்கரம்: ; 1794இல் 46.24 சக்கரம்; 1798இல் 4625 சக்." - இக்குறிப்புக்களால் கி. பி. 1798 வரை நித்திய பூசைக்காகவும் வியாசபூசைக்காகவும் 4625 சக்கரம் ஆண்டுதோறும் கொடுக்கப்பெற்றிருத்தல் கூடும் என அறியலாம். இதற்குப்பின்னர் மொயின் கொடுக்கப்பெற்றதோ இல்லையோ தெரியவில்லை; வியாஸபூசைக்கு மட்டும் தொகை கொடுத்தனர் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆனால், 38. அத்வைதசித்தாக்தம் நிலைத்தோங்க நமது காட்டின் வடகோடியில் பதரிகாச்ரமத் திலும், தென் திசையிலுள்ள சிருங்கேரியிலும், மேற்குக் கோடியில். துவாரகை யிலும், கிழக்குக்கோடியில் ஜகந்ாாதத்திலும் மடங்கள் கிறுவித் தமக்கு உரிமையாக ஆதிசங்கரர் காமகோடி பீடத்தைக் காஞ்சியில் நிலைக்கச் செய்தார் - பக்கம் 31, சங்கர குருபரம்பரை - ஆத்ரேய கிருஷ்ண சாஸ்திரி - 1980 39. K. R. Subramanyam - The Maratha Rajas of Tanjore (1928) P. 48 40. 4–74, 75; Preceptors of Advaita (59). Sri Kamakoti Pitha (P.434) by. N. Ramesan 41. ச. ம. மோ. த.21-6; 20-88 42. 3-16B 43. ச.ம. மோ. க. 17-86 44. ச.ம. மோ, க. 8-27 45. ச. ம. மோ. க. -ே45 46, 4–286