பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 தன்வந்தரி மகால் இதுபற்றி " வைத்தியம் ' என்ற தலைப்பில் (19) எழுதப்பெற்றுள்ளது. இதனை மருத்துவ ஆராய்ச்சிக்கூடம் என்னலாம். அங்கு நோயாளிகளுக்குச் சர்க்கார் ஆணையின்பேரில் மருந்து தரப்பெற்றுவந்தது. இதனை, ' 1834: தன்வந்தரி மகால் ஹாஜாரின் வேலையாள் கோவிந்தாரவ் சாங்கோஜியின் தங்கை காயலாவாக இருப்பதால் ஒரு மண்டலத்துக்குப் பூர்ண் சந்த்ரோதய மாத்திரையும் சுவர்ண மாலே வசந்த மாத்திரையும் கொடுக்கிறது" என்ற குறிப்பு' வலியுறுத்தும்.

கல்யாண மகால் இதுபற்றிய விளக்கம் கல்யாணமகால்" என்றதில் எழுதப்பெற்றதைக் கொண்டு அறியலாம். " 1825, தேதி 29 ரம்ஜான், திவான் அரண்மனையிடத்துக் கல்யாண மகால் வேலைக்குத் தளவாடங்கள் மெக்யாடு கூலி வகையறா... சக் 10,000 ' என்ற குறிப்பால்" கி. பி. 1825இல் கல்யாணமகால் கட்டி முடிக்கப் பெற்றிருத் தல் கூடும் எனத்தோன்றுகிறது. பிறிதோர் ஆவணம் 1825 தேதி 29 ரம்ஜான் கல்யாணமகால் வேலைக்குச்சக்கரம்10,000 கொடுத்தமையைக் குறிப்பிடுகிறது" சிவபூசை மக்ால் முதலியன " சிறிய பழைய சிவகங்கைக்குச் சமீபத்தில் இருக்கும் சிவபூசைமகால்” என்றவிடத்துச் சிவபூசை மகால் என்றொரு இடம் குறிக்கப்பட்டுள்ளது. கர்டா மகால் என்றொரு மகால் 1845இல் கூறப்படுகிறது. மோடி தமிழாக்கம் செய்தவர் ' இரவுபகல் வேலை செய்யும் அல்லது கெட்டுப்போன ஆவணங்களைப் புதுப்பிப்பதோ பாதுகாப்பதோ இதன்வேலை ' என்றெழுதி புள்ளார். "1785: லாஞ்சனமகால் - கொத்தமங்கலம் வட்டம் - மன்னார்குடி சுபா' என்றும்,' "1785: பண்டாரவாடை தாலுகா எல்லூர் மாகாணம் லாஞ்சனமகால் ' என்றும் பல இடங்களில் லாஞ்சனமகால் என்றொரு மகால் பேசப் படுகிறது. இலாஞ்சனை என்பது அரசனது முத்திரை என்று பொருள்படும். 47. 1-272 48. கட்டுரை எண் 28 காண்க 49. ச. ம. மோ. த, 26-21 50. ச. ம. மோ, த. 26-11 51. 7-585 52. ச. ம. மோ, க. 14-81 53 ச. ம. மோ, த. 18-185 54. ச. ம. மோ, த. 18-129