பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 ஆட்சியின் பிற்காலம் ஆகும். முகம்மது அலிக்கு உதவி புரிந்து பிரதாபசிங்க ரிடம் இருந்து கப்பம் வசூலிக்கச் செய்தார்." இவர் லார்ட் பிகட் ஆனபிறகு மீண்டும் 10-12-1775 முதல் சென்னைக் கவர்னராக இருந்தார். கி. பி. 1773இல் தஞ்சைக் கோட்டை முகமதியர்வசம் ஆயிற்று. துளஜா தன் குடும்பத்துடன் சிறையில் அடைக்கப்பட்டார். அணிகலன்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டன. மானாஜியும் சிறைப்படுத்தப்பட்டார். இச் செயல்கள் சென்னைக் கவர்னர் ' விஞ்ச்" ( Wynch ) உதவியால் நடந்தேறின. கவர்னர் செயலை இங்கிலாந்திலிருந்த குழுவினர் ( Council of Directors) ஏற்றுக்கொள்ஏவில்லை. துளஜாவுக்கு உடனே அரசபதவி அளிக்குமாறு ஆணையிட்டனர். லார்ட் பிகட் 11-4-1776இல் தஞ்சைக்கு வந்து துளஜாவை அரசு கட்டிலில் அமர்த்தினார்."அ ஆங்கிலேயருடன் துளஜாவும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி வெள்ளையர் துருப்புக்கள் தஞ்சையிலும் சில முக்கிய இடங்களிலும் வைக்கப்படலாயின. அத்துருப்புக் களின் செலவுகட்காக 4 லகூடிம் வராகன் கொடுக்க அரசர் ஒப்புக்கொண்டார்.' இதனை, சுஹர்சன் 1177 ; தஞ்சாவூரினுடைய கோட்டையும் தேசமும் பாதுகாப்பதற்காக ஆங்கிலக் கம்பெனியினுடைய நியமிக்கப்பட்ட மக்களுக்குச் செலவு செய்வதற்காக வருஷத்திற்கு நான்கு லக்ஷம் ஹோன்ன புலி வசூல் செய்து லாட் பிகட் பஹதர் இவருடைய பெயரில் கடிதம் எழுதிக் கொடுத்த தற்காக இந்த வருடம் பங்குனி மாதம் வாயிதா ஹோன்னபுலி 1,00,000" என்ற மோடி தமிழாக்கம் வலியுறுத்தும். ---. -- ----- இறுதிக் காலத்தில் லார்ட் பிகட் அவர்களுக்கு எதிரிகள் பலர் உண்டா யினர். அதனால் அவர் கைது செய்யப்பட்டார்; எனினும் இவர் இங்கிலாந்தி லிருந்து திரும்ப அழைக்கப்பட்டார். அதற்குள் இவர் சிறையிலேயே 11-5-1877இல் இறந்தார். லார்ட் பிகட் ஏற்படுத்திய உடன்படிக்கையினால் தஞ்சையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் வைக்கப்பட்டன; ஆண்டொன்றுக்கு அப்படையின் செலவுகளுக்கு 12 லகூடிம் ரூபா மராட்டிய மன்னர் அளிக்க லாயினர்ர்; தன் துருப்புக்களின் எண்ணிக்கை 500 ஆகக் குறைத்துக் கொண்டார். -- --- 1з, Р. 284, Maratha Rule in the Carnatic - C. K. Srinivasan 13.அ. ' பிக்கட்டு (Pigot) துரை வந்து பூரீ மகாராஜா சாகேபு அவர்களுக்குப் பட்டம் கட்டி வைத்தார் 6-279 14, 1–155; 5–387; Page 75, A History of British Diplomacy in Tanjore K. Rajayyan 15, 9–13 ; 12-13; ச. ம. மோ, த. 7-4.