பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 2. அலெக்ஸாண்டர் டேவிட் ஸ்ன் : இவர் 18-6-1785இல் சென்னைக் கவர்னர் ஆனார். துளஜா அரசர் (பாராட்டி) ஒரு கடிதம் இவருக்கு எழுதியுள்ளார்." இச்சமயத்தில் வங்காளம் சென்னை பம்பாய் ஆகிய இடங்களில் உள்ள சைனியங்கட்கு ஜெனரல் ஆக ஸ்லோயர் வந்தமைக்குப் பாராட்டுத் தெரிவித்து எழுதியமையால் அரசர் வெள்ளையருக்கு மிகுதியாக அடங்கி இருக்க வேண்டிய நிலை தெளிவாகத் தெரியவருகிறது. 3. Jiki 3 4lum 80G 8, nu Qu60 (Sri Archibald Campbell) : இவர் கவர்னராகவும் சேனைத் தலைவராகவும் இருந்தவர். துளஜா 31-7-1787இல் கைலாஸ்வாஸி ஆன்பொழுது இவர் சென்னைக் கவர்னராக இருந்தவர். துளஜாவுக்குப் பிறகு சரபோஜி சார்பில் அரசை ஏற்றுக்கொண்ட அமர்சிங்கு ஆடம்பரச் செலவு செய்கிறார் என்று கேள்விப்பட்டு அங்ங்னம் செய்தல் கூடாது என்று கவர்னர் காம்பெல் (Campbell) அமர்சிங்குக்குக் கடிதம் எழுதினராதல் வேண்டும். அதற்கு மறுமொழியாகத் தாம் தம் முன்னவரைக் காட்டிலும் குறைவாகவும் சிக்கனமாகவும் செலவு செய்வதாகவும், ராஜ்யத்தைப் பாது காக்காமல் வீணாகச் சுற்றுவதில்லை என்றும், அந்தந்தச் "சுபை” (நாடு) களுக்குச் சென்று "ரயத்து"க்களைக் கண்டு வருமானத்தை மிகுத்துவருவ தாகவும், வேடிக்கை பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் இராஜ்யத்தைச் சுற்ற வில்லை என்றும், இரவில் தீவட்டிகளுடன் வாணவேடிக்கைகளுடனும் பெண்களுடனும் ஊர்வலம் போகும்பொழுது தன் முன்னவர்போலக்கூடச் செலவு செய்வதில்லையென்றும், தாம் நன்றியை மறக்கவில்லை என்றும், உதவி புரிந்து தமக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தால் கவர்னருக்குப் புகழ் வருமாறு தாம் நடந்துகொள்வதாகவும் எழுதியுள்ளார்."அ 4. லார்டு ஹோபர்டு : இவர் 7-9-1794 முதல் 21-2-1798 வரை கவர்னராக இருந்தவர். 1796க்குரிய மோடி தமிழாக்கம், லாட் ஹோபரபட் ஆனவர் ராஜா ரீமந்த் சத்திரபதி சாஹேப் புறப்படுகிற நாள் நிச்சயம் செய்து சொல்லுவதற்கு மிஸ்தர் ஜெரிக் சாஹேபுக்குச் சொல்வியிருப்பதாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்...... ..."என்றுள்ளது.' இதனால் இரண்டாம் சரபோஜியை மகாராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மேலிடத்து உத்தரவு வந்தது என்றும், கவர்னர் அவர்கள் ஒரு நாளை நிச்சயித்துச் சரபோஜியைத் தஞ்சைக்கு அனுப்ப இருந்தார் என்றும் அறியப்படும். இவர் சரபோஜியிடத்து மிக்க அன்புடையவராக இருந்தவர்; தாம் வேட்டைக்குச் செல்லுங்கால் சரபோஜியை உடன் அழைத்துச் சென்றவர் என்று ஓராவணம் கூறுகிறது.'க - --- 16, 5-32: 16.அ. 1-7 முதல் 14 வரை 17. 3-6 17.அ. 1.82