பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சிக்குரிய நிலப்பகுதி பட்டுக்கோட் *ủ) L- 1 மன்னார்குடி, மாயூரம், கும்பகோணம், திருவையாறு என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றிருந்தது. ஒவ்வொரு பகுதியும் ' சுபா ' எனப்பட்டது. ஒவ்வொரு சுபாவுக்கும் ஒரு அரசியல் அதிகாரி இருந்தார் ; அவர் சுபேதார்’ எனப்பெற்றார். சுபாவின் ஆட்சித்தலைமை மட்டுமன்றி இராணுவத்துறையும்' இவர் அதிகார வரம்பில் இருந்தது எனப்படுகிறது. " பதக் ' ( பத்தக் ) அல்லது " பதகம்' (பத்தக்கம் ) என்பது சில ஊர்களின் ஒன்றியும் என்னலாம். ஹைதர் கலாபினால் நாடு பாழடைந்தது; ஆகவே நாட்டைச் செம்மைப் படுத்தத் துளஜாஜி தன் அமைச்சர்களுள் ஒருவரான பாவா பண்டிதரைக் கொண்டு நிலச்சீர்திருத்தம் செய்தார். ஹைதர் கலாயினால் அழிவுக்குட்பட்ட நிலப்பகுதிகளோடு செழிப்புள்ள நிலங்கள் ஒருங்கு சேர்க்கப்பெற்றன. அத்தொகுதிகள் " பதகம் ' ( Pattak ) என்று பெயரிடப்பட்டன. ஒவ்வொரு பதகத்தையும் கண்காணிக்க ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் "பதக் தார் ” ( Pattakdar ) எனப்பட்டார்." அமில் தார்" என்பது பிறிதோரலுவல் ஆகும். இவரை வருவாய்த்துறை அலுவலர் என்பர் ஒரு சாரார்."அ ஜில்லா so florf ( District Officer) என்று சி. இராமச்சந்திரன் என்பவர் கூறுவர். இது எங்ங்னம் என்பது விளங்க வில்லை. சிரஸ்தே தார் என்பவர் ஆவணக் காப்பாளர் என்பர் திரு. சி. இராமச் சந்திரன் அவர்கள்." ஆனால் " தாசில்தாருக்குத் தாசில்தார் வேலை செய்து கொடுத்து அவர்களிடமிருந்து வருஷத்திற்கு இருவரும் ரூ.1000 கொடுப்பது: என்ற குறிப்பால் தாசில்தார் போன்ற அலுவலர்களை நியமனம் செய்யும் அதிகாரமோ, அல்லது பரிந்துரைக்கும் செல்வாக்கோ சிரஸ்தேதார் உடைய சாதல்கூடும் என்று தோன்றுகிறது. இவர் ரெஸிடெண்டு அலுவலகத்தில் இருப்பவர். - -: தாசில்தார்" என்பவர் ஒரு தாலுகா அல்லது சிறிய பிரிவில் வரி வசூல் செய்யும் அலுவலர். --- 3. 1-15. 4. The Subhadar was a most powerful man for, he was not only the controller of the administration machinery of the Subha but was also in charge of the military dept.-P. 353, Maratha Rule in the Carnatic-C. K. Srinivasan 5, 1-15, p. 365–66, The Pattack System-Maratha rule in the Carnatic Srinivasan, C. K. 6, 1-21 ா or 6 m. Administrator of Revenue, Glossary, Administration & Society in the Carmatic K. Rajavyan ... " 7 Glossary-East India Company & South Indian Economy, C. Ramachandran. New Era Publications, Madras (1980) - * * * = - - - - - 8. 1-91 9, Glossary - C. R. 10, 1-91