பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ჩ மேற்கண்ட கடிதங்களில் உள்ள குறிப்புக்களால் தஞ்சையில் அமர்சிங்கு சிவராயர் ஆகியோருடைய நடத்தைகளைப் பற்றியும், வெள்ளைக்கார அதிகாரி களின் கருத்துக்களைப்பற்றியும் தெரிந்து அவ்வப்பொழுது சரபோஜி ராஜா அறியும்பொருட்டுத் தத்தாஜி அப்பாவுக்கு எழுதிவந்தனர் என்று கொள்ளக் கிடக்கிறது. இரண்டாம் சரபோஜி பட்டம் பெற்ற பின்னர் நன்றியறிவுடையவராய்த் தத்தாஜி அப்பாவுக்கு 1805இல் கும்பகோணத்தில் 50 வேலி நிலத்தைச் சுரோத்திரியம் செய்து கொடுத்து அதற்குச் சரபோஜிராஜபுரம் என்று பெயரிட்டார்." கி. பி. 1834க்குரிய குறிப்பு' ' தத்தாஜி அப்பாவின் மகன், மகள் ஆகியோருடைய கலியானச் செலவு விபரம்' என்று காணப்படுவதால் அவ் விருவரின் திருமணச் செலவுகளைச் சர்க்காரே ஏற்றது என்றும், சரபோஜி காலத்துக்குப் பிறகு தத்தாஜி அப்பா உயிர்வாழ்ந்திருந்தார் என்றும் கொள்ளலாம். தஞ்சையில் ஒரு தெருவுக்குத் " தத்தாஜி அப்பா சந்து ' என்று பெயரிடப்பெற்றுள்ளது. -- முத்தோஜி அப்பா : 4-11-1846க்குரிய ஆவணம்" இரண்டாம் சிவாஜிக்குத் திருவிழிமிழலையில் இருந்த தாசி சின்னிக்குட்டி என்பாள் எழுதிய கடிதம் ஆகும். இதில் முத்தோஜி அப்பா "மாஜி ஜெனரல்" என்று கூறப் பெறுகிறார். இதனால் இவர் "சேனாதிபதி' என்ற பட்டப்பெயருடையராய் இருந்தார் என்றறியலாம். துளஜா காலத்திலேயே காவல் உரிமையை வெள்ளையர் மேற் கொண்டனர்; ஆகலின் போர்ப்படை இல்லையென்றே சொல்லலாம்; எனினும் பெயரளவில் சிப்பாய்கள் " இருந்தனர். அவர்கட்குத் தலைமைப் பதவி வகித்தவர் உண்டு. அத்தகைய தலைமைப்பதவி முத்தோஜி அப்பா வகித்திந் தனர். ஆதல் வேண்டும். இவ்வாவணத்தால் இவருக்கு இரு மனைவியர் களாவது இருந்திருத்தல் வேண்டும் என்றும், முதல் மனைவியின் மகன் ராமலிங்கண்ணா என்றும், இரண்டாவது மனைவியின் மகன் கோவிந்தசாமி யண்ணா என்றும் தெரிகிறது. இவ்விருவருக்கும் வழக்கு நடந்துள்ளது. கோவிந்தசாமியண்ணா தாசி அன்னம் என்பவளுடன் தொடர்புடையவராய் இருந்தார். ராமலிங்கண்ணாவுக்குச் சில பிள்ளைகள் இருந்தனர், "தயா விஷயமாய்' மனதிரங்கிக் கோவிந்தசாமி அண்ணாவுக்கு ஆவிக்கரைக் கிராமம் பத்துவேலி நிலத்தைக் கொடுத்தனர். அந்நிலத்தையும் தன் நிலமாகிய சர்லியமங்கலம் நாலுவேலி நிலத்தையும் கோவிந்தசாமி அண்ணா அடைமானம் --- 48, 2-221 49. 5-302 50, 6-408 முதல் 417 முடிய