பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

177


ஜங்கு பெரும் படையுடன் வந்ததை அறிந்து, முற்றுகையை விட்டுப் புதுச்சேரிக்கு ஓடினார். பின் புதுச்சேரியின் உதவி பெற்று நடத்தியபோரில் நாஜர் ஜங்கு கொல்லப்பட்டார்.

சந்தா சாயபு இப்பொழுது திருச்சியை நோக்கிப் படையெடுத்தார். அப்பொழுது அல்லும்கான் என்பவரும் சந்தா சாயபுக்கு மதுரையினின்று உதவிக்கு வந்தனர்.

திருச்சியிலிருந்த மகம்மது அலி தஞ்சையரசரது உதவியை நாடினார். மானாஜிராவைப் பெரும்படையுடன் தஞ்சை அரசர் அனுப்பினார். விஜயரகு நாதத் தொண்டைமானும், இராமநாதபுரத்தரசரும், சீரங்கப்பட்டணம் அரசர் நந்திராஜாவும், மூரார்ஜிகோர்படேயும் முகம்மது அலிக்கு உதவியாக வந்தனர். அல்லும்கான் மானாஜிராவுடன் சண்டையிட்டார். அப்பொழுது ஆங்கில மேஜர் ஒருவர் ஒரு பீரங்கியைச் சுட்டார்; அல்லும்கான் குண்டுபட்டிறந்தார்.

சந்தா சாயபுக்கும் முகம்மது அலிகானுக்கும் பல நாட்கள் போர் நடந்தது. சந்தாசாயபுடைய பாளையத்துக்கு உணவுப் பண்டங்கள் போகாத வாறு தடுக்கப்பட்டது. சந்தாசாயபு இன்னது செய்வது என்று தெரியாமல் தஞ்சாவூர்ச் சேனைத் தலைவராகிய மானாஜிராவிடம் வந்து அடைக்கலம் புகுந்தார். மானாஜிரால் இச்செய்தியை அரசருக்குச் சொல்லியனுப்பி, அரசர் ஏவலினால் சந்தாசாயபுவைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தார். இதை அறிந்த முகமமது அலகானும், முரார்ஜி கோர்படேயும், நந்திராஜாவும். இங்கிலீஷ்காரரும் சந்தாசாயபுவைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். மானோ ஜிராவ் 3-6-72 இல் சந்தாசாயபுவின் தலையை வெட்டி முகம்மது அலிகானிடம் அனுப்பினார். இதற்குள்ளாகவே 21-4-1752 இல் கோவிலடியைத் தஞ்சைச்சேனைகள் கைப்பற்றின. முகம்மது அலிகான் கோவிலடித் கோட்டையையும் இளங்காடு சீர்மையையும் பிரதாபசிங்கருக்கு அளித்தார்.

நந்திராஜாவும், முரார்ஜிகோர்படேயும் திருச்சியைத் தாம் பெற வேண்டும் என்று முயன்றனர். இதற்கிடையில், திருச்சியில் பெரிய சேனையை வைத்துவிட்டு, முகம்மது அலி சென்னையை நோக்கிப் போனார். இதையறிந்த முரார்ஜியின் தம்பி பண்ணுருட்டி திருவதிகையில் முகம்மது அலியை மடக்கிப் போரிட்டு இறந்தார். இதையறிந்த முரார்ஜி தம்முடைய ஊராகிய குத்திக்குப் போய்விட்டார். நந்திராஜாவும் சின்னாள் இருந்து பின் சீரங்கப்பட்டனத்துக்குப் போய்விட்டார்.

இந்நாளில் பிரதாப சிங்கர் தன் மகன் துளஜாவுக்கு ராஜகும்ராபாயியைத் திருமணம் செய்து வைத்தார்; அடுத்து மோகனாபாயியையும் மூன்றாவது மனைவியாகத் திருமணம் நடத்தி வைத்தார்.

புதுச்சேரிக்கு ஒரு புதிய கவர்னர் வந்தார்; அவருக்கு முசேலாலி என்று பெயர். அவர் தஞ்சையை முற்றுகையிட்டுத் தோற்றோடினார்.

பின்னர் அப்புதுச்சேரி கவர்னர் சென்னைக்குச் சென்று முற்றுகை