பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

181

தாய்மார்களும் சென்னைக்குச் சென்று அங்குத் தங்கினார்கள். அந்நாளில் சரபோஜியின் உரிமை நிலை நாட்டுவதற்கு முயற்சிகள் நடந்தன. காசி முதலான இடங்களிலும் இதுபற்றி ஆய்வு நடந்தது. சரபோஜி தஞ்சைக்கு வந்தார். முன்னே இதுபற்றிக் கூறிய பண்டிதர்களில் இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் சரபோஜியின் உரிமையை நிலைநாட்டிக் கூறினார். இந்நிலையில் சுவார்ஷ் இறந்துபோனார். அமர்சிங்கு நீக்கப்பட்டுச் சகம் 1720இல் சரபோஜி தஞ்சைக்கு அரசரானார்.

16சரபோஜி ஆட்சியைப் பெற்றதும் அரசாங்கக் கணக்குகளை ஒழுங்கு படுத்தினார்; அரண்மனையைப் பழுதுபார்த்தார்: சிறிது மால்களைக் கட்டினார்; கும்பினியார் டிப்புவின் பேரிலே படையெடுத்தபோது தன்னால் ஆன உதவிகள் புரிந்தார்.

சரபோஜி, யமுனாபாயி அஹல்யாபாயி ஆகிய இருவரை மணம் செய்து கொண்டார்.

சரபோஜிக்குப் பட்டம் கிடைப்பதற்குமுன். சரபோஜிக்குச் சேரவேண்டிய தொகைகளை ரெஸிடென்டு ஆக இருந்த மக்லோடு சரிவரச் செலுத்தவில்லை என்று கவர்னருக்கு எழுதியதன் பேரில், கவர்னர், நன்கு விசாரித்து, மக்லோடு செய்தது தவறு என்று கண்டறிந்து. அவரை வேலையினின்று நீக்கினார். விசாரணைச் சமயத்தில் சரபோஜிக்கு உதவியாக ரெசிடெண்டு டூரியன் இருந்தார்; சரபோஜியின் பொருட்டு தத்தாஜி அப்பா சென்னைக்குச் சென்றிருந்தார். மக்லோடு தன் தவறினையுணர்ந்து தன் மனைவியுடன் போந்து சரபோஜியிடம் மன்னிப்புக் கேட்டார். சரபோஜியும், அன்பு கொண்டு அவர்களுக்குப் பதினாயிரம் ரூபாஇனாம் அளித்தார்.

அகல்யாபாயி சாயபுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குச் சுலக்ஷணாபாயி என்று பேர் வைக்கப்பட்டது.

பின்னர் அரசாட்சியை நன்கு நடப்பித்தற் பொருட்டுத் தன்னுடைய தேசத்தை அரசர் கும்பினியாரிடம் ஒப்பித்தார்.

அப்பொழுது கும்பினியாரிடம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். சகம் 1801 இல் பிளாக்பர்ன் வசம் ஒரு சிறு படை அனுப்பினார்.

சரபோஜி திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு மங்கையைக் காதலித்திருந்தார். அவர்க்கு இரண்டு குழந்தைகள் பிறந்திறந்தன. இரண்டாம் குழந்தை பிறந்தபொழுது அவ்வம்மையும் மாண்டார். அவர் இறக்கும் தறு வாயில் தன் பேரால் ஒரு அன்னசத்திரம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க (ஒரத்தநாட்டில்) அவர் பேரால் முக்தம்மாள் சத்திரம் நிறுவப்பெற்றது.

பின்னர்ச் சோழ நாடு முழுமையும் ஒருவிசை, சீரங்கயாத்திரை ஒருவிசை. சங்கமுக யாத்திரை ஒருவிசை, பழனி யாத்திரை ஒருவிசை - இப்படி நான்கு