பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

221



28. பிரதாப சிம்மரின் இறுதிக்காலச் செய்திகள் (போ. வ. ச. பக். 115-117)

29. நாநாசாகேபு முதலியவர்களைப் பற்றியவை (போ. வ. ச. பக். 116)

30. துளஜா காலத்தில் ராமநாதபுரத்தோடு சண்டயிடக்காரணம் - வேறுபாடு

(போ. வ. ச. பக். 118; திருமுடி. பக்கம் 379-382)

31. கிலிபிலி அண்ணா - ஆரணிப்பிராமணன் செய்தி (போ. வ. ச. பக். 122)

32. ஹைதர் அலி படையெடுப்பு (போ. வ. ச. பக். 126)

33. தனக்குப் பிறகு ஆட்சி செய்யத் தனக்குப் பிள்ளையில்லாமையால் தனது தாயாதிகளுக்குள் ஒரு பிள்ளையைச் சுவிகாரமெடுத்துக் கொண்டு ஜாத கருமம் முதலியவற்றைச் செய்து சரபோஜி என்ற பெயர் வைத்துக் கர்னல் இப்ஸிலி கம்மாண்டர் உஷ்டோட் சுவார்ட்சு பாதிரி முதலியவர்களிடத்தில் ஒப்படைத்தார் என்று போ. வ. ச. வில் (பக். 126-128 இல்) கூறியிருக்கத் திருமுடி சேதுராமன் சுவடியில் (பக்கம் 412-421 இல்), துளஜா நோய் வாய்ப்பட்டார் என்றும், துளஜாவின் மனைவியரும் அரசருடைய மைத் துனரும் சிலரும் சேர்ந்து கொண்டு சகம் 1708 கி. பி. 1786 ஜனவரி 22இல் சுவீகாரம் செய்து கொண்டதாக வெளிப்படுத்தினர் என்றும். மேலே கூறிய கர்னல் துரை முதலியவர்கட்கு அறிவித்தனர் என்றும், அத்துரை கள் வியந்து அமர்சிங்குக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்று முன் வந்த ஆணை அறிந்தவராதலால் அரசர் சுவீகாரம் எடுத்துக் கொள்ளமாட்டார் என்று கூறினர் என்றும், மறுநாள் துளஜாவும் அமர்சிம்மரை அரசராக நியமித்து ஆசி கூறினார் என்றும், துளஜா இறந்ததும் துளஜாவின் தாயாரும் பிறருடன் சேர்ந்து கொண்டு அமர்சிங்கு துளஜாவின் இறுதிக் கடன்களைச் செய்யக் கூடாது என்று தடுத்தார் என்றும், கர்னல் துரை உத்தரக் கிரியை செய்யட்டும்; பிறகு கவர்னமெண்டார் உத்தரவுக்கேற்ப நடந்து கொள்ளலாம்' என்றும் கூற அங்ங்ணமே அமர்சிங்கர் இறுதிக்கடன் களைச் செய்தார் என்றும், பிறகு பன்னிருவர் சாட்சியின்படி அமர்சிங்கு அரச பதவியை ஏற்று 2- 4- 1786 இல் பட்டாபிஷேகம் செய்யப்பெற்றார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.

34. சரபோஜி தந்தையின் முன்னோர் (அதாவது சரபோஜி எந்த வமிசத்தைச்

சேர்ந்தவர் என்பது பற்றி) (பக். 127-18)

அமர்சிங்களின் ஆட்சியில் சிறப்புச் செய்திகள்

இது திருவிடைமருதுார் சார்பான சுவடியாகலின், அமர்சிங்கரின் ஆட்சிக்காலச் செய்திகள் சிலவற்றை எதிர்பார்க்கலாம். குறிப்பிடுவதற்குரியன வாக எதுவும் இல்லை யென்னலாம்:

1. மழையில்லை (பக். 422); குடிகள் முறையிட்டனர்; அரசர் தைரியம் சொல்லியனுப்பினார்; ஊர்களுக்கு அரசர் சவாரி போனார்: மழை பெய்தது