பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தஞ்சை மராட்டிய

அவர் இறந்த பொழுது அவரது “போகஸ்திரீ” ருக்குமணி அம்மாள் தீக்குளித்தமை (பக். 466).

அமர்சிங்கு இறந்த பிறகு “அமரலிங்கம்” என்று கொண்டாடப் பெற்றமை (பக். 467); குடிகளின் நோய்பிணிகள் தீர்க்கப்பட்டமை (பக். 467).

அமரசிங்குக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஓய்வூதியம் (மொயின்) 25 ஆயிரம் வராகனும் அவர் மகனுக்குக் கொடுக்கப்பட்டு வந்தமை (பக்கம் 469—470).

அமர்சிங்கின் மகன் பிரதாபசிங்கு, யமுனாபாயி சக்வார்பாயி ஆகிய இருவரை மணம் செய்து கொண்டமை (பக்கம் 471).

பிரதாப சிங்குக்குப் பிள்ளைகள் இல்லாமையால் சக்கரவர்த்தி போசலே என்பவரை 15-1-1849 இல் சுவீகாரம் எடுத்துக் கொண்டு ஏகோஜி என்று பெயரிட்டமை (பக்கம் 474).

கும்பகோணம் “சப்ஜட்ஜ்” வந்தபொழுது அவரிடம் தான் சுவீகாரம் எடுத்துக் கொண்ட செய்தி கூறியமை (பக். 476) கவர்னருக்கு எழுதவேண்டும் என்றமை.

பிரதாப சிங்கு கி.பி.1849இல் இறந்தமை (பக். 477).

பிரதாப சிங்கு தன் அம்மான் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இறந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இறந்தமையின் தான் அவருக்கே உரியவராகக் கருதிஅந்தப் பெண் கைம்பெண் தன்மையை அடைந்தாள் (பக். 478-479). (இது அவுரங்கசீபு மகள் கதையைப் போன்றுளது).

பிரதாப சிங்கு இறந்த பிறகு பிரதாப லிங்கம் என்று கொண்டாடப் பெற்றுக் குடிகளின் பிணி தீர்த்தமை (பக். 480).

சுவீகார மகனாகிய ஏகோஜி நலனே யிருக்கிறார் (பக். 4.81).

(2) நாகநாத மொயித்தேவராவ் சுவடி[1]

இச்சுவடி 7-4-04 (1904) என்ற ஆண்டுக்குறிப்பையுடையது. நாகநாத மொயிதேராவ் சாயபு என்று ஆண்டுக்குறிப்புக்கு மேல் எழுதப்பட்டிருத்தலால் இச்சுவடி நாகநாத மொயிதேராவ் என்பவரால் எழுதப்பெற்றது என்னலாம்.

இது ஏன் எழுதப்பட்டது என்பது தெரிய வாய்ப்பில்லை.


  1. இக் காகிதச் சுவடியை அன்புகூர்ந்தளித்தவர் தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தை சேர்ந்த திரு. கிருஷ்ணசாமி மாடிக்ராவ் சாகேபு அவர்கள் ஆவர். அன்குருக்கு நன்றி.