பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தஞ்சை மராட்டிய

ராட்டிரத்துக்கு வந்தார். கி.பி. 1673 மார்ச்சுத் திங்களில் பொலத்பூரில் (Poladpur) இருந்தபொழுது சிவாஜி இவரைக் கண்டுள்ளார்.

கி.பி. 1674 ஜூன் திங்களில் சிவாஜியின் பட்டாபிஷேகத்துக்குப் பின் னரே, சிவாஜியின் வரலாற்றை 100 அத்தியாயங்கள் கொண்ட நூலாக எழுது மாறு பணிக்கப்பட்டார். சிவாஜி இறந்தபொழுது 32 அத்தியாயங்கள் (32இல் 9 சுலோகங்கள்) வரையிலுமே எழுதப்பட்டிருந்தன.

இந்நூலுக்குக் கiந்திரர் இட்ட பெயர் சூரியவம்சம் என்பதாகும். இது ஒரு அனுபுராணம் (தற்காலப் புராணம்) ஆகும்."

தமிழ்ச்சுவடியில் அத்தியாயத் தலைப்பு முதல் இரண்டு அத்தியாயங் கட்கு மட்டும் தரப்பட்டிருந்தது. ஆனால் தமிழாக்கத்தை அச்சிடுங்கால் திரு ம. சீராளன் அவர்கள் வடமொழி மூலத்தை ஒப்புதோக்கி அத்தியாயம் பிரித்துள்ளார்." ---

சம்பாஜி சிவாஜியைப் பிரிந்த கால முதற்கெண்டு சிவாஜி இறக்கும் வரையிலான வரலாறு 13 அதிகாரங்களில் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயத் தின் இறுதியிலும் அத்தியாயத்தின் முடிவு கூறப்பட்டதேயன்றி அத்தியாய எண் குறிப்பிடப் பெறவில்ல்ை.

| எனவே 1661 முதல் 1676 வரையிலான செய்திகள் எழுதப்பெறவில்லை யென்றும், இறுதி 13 அதிகாரங்கள் சிவாஜி இறந்துபட்டபின்னரே எழுதப் பட்டனவாதல் வேண்டும் என்றும், எஞ்சிய 137 பக்கங்கள் கவீசுவரருடைய மகன் கோவிந்தர் II சம்பாஜியைப் பற்றி எழுதியனவாகும் என்றும் அறியலாம்.

சிவபாரதத்தில் மால்வர்மா என்றவர் சூரியவமிசத்தினர் என்றும், அவர் மனைவி உமாபாயி என்றும், அவருக்கு விட்டோஜி என்று ஒரு தம்பி உண் டென்றும், மகாதேவருடைய அருளால் ஹாஜி சரபோஜி என்று இரு பிள்ளை கள் பிறந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளன. மாலோஜியின் முன்னவர்கள் பற்றி

இந்நூலில் இல்லை.

போ.வ.ச. வில் கூறியுள்ளது போல் ஷா ஷரிப் பே அலி கலந்தர் என்ற

முகமதிய ஃபக்கீரின் திருவருளால் ஹாஜியும் அவர்தம்பியும் பிறந்தனர் என்ற

செய்தி இந்நூலில் இல்லை.

ஹாஜி-ஜிஜாபாய் திருமணம் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஏகோஜி துக்காபாயி திருமணம் சொல்லப்படவேயில்லை.

8. J, Sarkar, House of Shivaji, Page 287. 9. சிவபாரத சரித்திரம், தமிழாக்கம், முன்னுரை, பக்கம் i