பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

71

 7.I

இடத்தில் டாணையம் வைத்தார். அப்பாலிந்த இராட்சியத்தின் பேரிலே' போயிருக்கிருரென்று இப்படிக்கெல்லாம் கேழ்விப்படுகிறது மாத்திரமேயல்லாமல் ருஜா சித்திரக்காரன் கண்ணுக்குத் தென்பட யில்லை. இப்படி வெகு ள்ை வரைக்கும் தேடிக்கொண்டிருக்கிற வேளையில் ஒரு ள்ை சண்டைக்குப் போற வுேளையிலே கால் தளங்களை அநேகமாய் முன்னே விட்டுக்கொண்டு மூணுலெட்சம் குதிரை சவார்களுடனே* சிவாஜிருஜா ருச்சியம் சாதிக்கிற காரியத்தினலே சுறுக்காய் போற சமையத்திலே இந்த சித்திரக்காறன் பார்த்தான். அப்போ அவரிருந்த அவசரம்: சிவாஜிருஜா நல்ல குதிரையின் மேலேறிக்கொண்டு தலையிலே முண்டாசும் அரையிலே சல்லடம் போட்டுக்கொண்டு தாடுபத்திரி மேலே போட்டு இடுப்பிலே சுத்திக்கொண்டு கையிலே யிருந்த பாலாவை தோளிலே வைத்து தலையை சாய்த்து அதை அமக்கிக்கொண்டு சொளக்கொல்லை வழியாய் போறவர் சோளக் கதிரைக் கிள்ளி அதை ரெண்டு கையிஞலேயும் பிசைந்து வாயிலே போட்டுக்கொண்டு அந்த கதிர் செத்தையை குதிரையின் வாயிலே கொடுத்துக்கொண்டிருந்தார். அப்படிக்கொத்த அவசரத்தை சித்திரக் காறன் பார்த்து படம் எழுதி அதை அபறங்கசீபுக்கு கொண்டு போய் கொடுத் தான். அவர் அதைப் பார்த்து ஆச்சிரியப்பட்டுச் சொன்னது: சிவாஜிரு.ஜா மூணுலகம் குதிரைக்கு சற்தார், பூரீமந்தன்,' அப்படிக்கொத்த ருஜா காரியத்தை செய்யிக்கிற அபேஷ்சையினலே ஒரு விடத்திலே யிறங்கி கொஞ்சம் சாப்பிடுகிறத்தினலே நேரஞ் சென்றுபோய் காரியங் கெட்டுப் போமென்றும் கிட்டயிருக்கிற சற்தார்க்கள் தாம் நினைத்தப்படியே காரியத் திலே பிறவற்திக்கிறத்திலே யோசினைபண்ணி குழம்புவார்களென்று தாம் சோளக்கதிரை உடைத்து பிசைஞ்சு திண்னு அந்த செத்தையை குதிரைக்கு மேய்பிச்சார். இந்த விதமாய் பிறையாசைப்படுகிறதும் சாகிறதையுமாக யிருக்கப்பட்ட ருஜாவை செயிக்கிறத்துக்கு ஆராலே கூடுமென்று நினைத்து பிறையாசைப்பட்டும் வியற்தமாய்போகுமென்று யோசனைபண்ணி சொஸ்த்தமா யிருந்துவிட்டார்கள். இந்தப்படிக்கு வெகு ருச்சியங்களை செயித்து அநேக திரவி யம் சேர்ந்த பிற்பாடு தம்முடையபேர் என்றென்றைக்கும் பிறக்கியாதியாயிருக்க வேணுமென்று யோசனை பண்ணி அதுக்குத் தக்க யோக்கியமா யிருக்கப்பட்ட சிவகெட மண்டனகெடம் இப்படிக்கு முன்னுாத்தறுபது' கெடிகளை கட்டினர்.

(7) அதுக்கு பிற்பாடு சிவாஜிருஜா என்கிறவர் தம்முடைய மூத்த ஏகோஜி IV தமையன் சம்பாஜி ருஜாவுடைய பிள்ளை உமாசி ருஜாவை

தஞ்சைப் யும் சம்பாஜி ருஜாவுடைய பெண்சாதிகள் ஜெயந்திபாயி படையெடுப்பு கெவுருபாயி' பாற்வதிபாயி இந்த மூணு பாய்சாயபுகளு

147. பேரிலே' என்பதற்குப் பிறகு "சாரி' என்ற சொல் டி3119 இல் உளது 147.அ. சவார்கள் - படைகள் 148. பரிமந்தன் -இஸ்த்திரிமந்தன் (டி 3119)

149, 360 கோட்டைகள் என்றிருப்பினும் கிருஷ்ணாஜி அனந்த் ஸ்பாலத் எழுதிய சிவச் சத்திர பதியின் சரிதத்தில் (சென், பக். 141 - 148) 241 கோட்டைகளின் பெயர்கள் தரப்பெற்றுள்ளன. தகாகாவ் (பக். 558 - 560) சிட்னிஸ் எழுதியவரலாற்றை ஆதாரமாகக் கொண்டு சிவாஜியின் கோட்டைகள் 260 என்றும், அவற்றுள் 111 சிவாஜியால் எடுப்பிக்கப்பெற்றன என்றும் கூறுவர்.

1. கெலுருபாயி - கெளரிபாயி (போ. வ. ச. பக். ச2)