பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 87 சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய்! எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய்! தகுமோ இவளுள் மெலிவே! — 2-18-1 என்று தொடங்கிப் பதிகம்பாடி அவனை உயிர்ப்பித்தார் என வரலாறு பேசிச் செல்கிறது. இப்பாடலைச் சற்றுக் கூர்ந்து நோக்கின் இவர்கள் பக்தி எத்தகையது என்பதை யும் விளங்கிக் கொள்ளலாம். வயலுக்குப் பாய்ச்சும் நீரால் மடையிலுள்ள குவளையும் மலர்கிற ஊராம் திருமருகல் அவ்வூருக்கு வந்து கருணையே வடிவான இறைவன் திருக் கோயில் அருகே புலம்பியழும் வணிகப் பெண் துயரம் தீரவில்லையானால் உன் கருணை இருந்தவாறு என்னே! என்று பாடுகிறார் பிள்ளையார். தம் அறிவின் துணை கொண்டு செய்யப் பெறும் பக்தியால் விளைந்த பயனாகும் இது இறைவனுடைய பேராற்றலையும் அதன் எதிரே இப்பெண்ணின் எல்லையறு துயர நிலையை யும் ஒப்பிட்டுப் பார்த்து இறைவன் கருணை பாலிக்க வேண்டிய இடம் என்பதை இவ்வருஞ்செயலை நிகழ்த்து கிறார் பிள்ள்ையார். இத்தகைய பக்தர்களைத் தம்பாற் கொண்டு இலங்கிய சமயங்கள் இன்று இந்த இழிநிலையை அடையக் காரணம் யாது? பக்தியின் அடிப்படையில் தோன்றிய சமயங்கள், அந்தப் பக்தி என்னும் வேரின் ஆற்றலாலேயே வளர்ந்து உரம் பெற்று நின்றன. நாளவட்டத்தில் பக்தி என்ற வேர் தான் செய்யவேண்டிய பணியைச் செய்யாமையினால் மரம் வாடத் தொடங்கிவிட்டது. ஆழ்ந்த பக்தி தோன்று தற்குக் காரணமாக இருந்தது அறிவு. அறிவு வழிச்சென்ற ஆராய்ச்சி பக்தியில் கொண்டு விட்டது. இந்தப் பக்தியை வளர்ப்பதற்குப் பல சடங்குகள் தோன்றின. அந்த அடிப்படை நம்பிக்கையும் சடங்குகளின் பொருளும்