பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.86 0 அ. ச. ஞானசம்பந்தன் இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும சொல்லிய இச் சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந்தான் சலியாதோ? - நகரச்சிறப்பு - 35 என்று பேசுகிறான். வழக்கம் என்று கழுவாய் தேடி விட்டால் பசுமாட் டின் துயரத்தைப் போக்குதல் கூடாது. அது இயலவில்லையானால் வேறு செய்வது யாது? இதோ அவனே விடை கூறுகிறான். 'எனமொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ்ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது தனது உறுபேர் இடர்யானும் தாங்குவதே கருமம்' -நகரச்சிறப்பு - 42. இவ்வாறு கூறுவதால் பிறிதின் நோய் தந்நோய் போல் போற்ற முற்பட்ட பக்தனின் மன நிலையை அறிய முடிகிறது. - இதே மனநிலையுடன்தான் ஞானசம்பந்தராகிய பக்தர் திருமருகலில் கணவனை இழந்து வருந்தும் கன்னி யின் துயர் தடைக்கப் புறப்படுகின்றார். மனுவுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில் மனு கன்றை எழுப்பித் தரும் ஆற்றல் இல்லாதவன்; பிள்ளை யார் இறந்த கணவனை எழுப்பி அவன் மனைவிக்கு வாழ்வு அளிக்கும். ஆற்றல் உடையவர். எனவே அவள் துயரத்தைத் துடைத்துவிட முற்படுகின்றார் இறைவனின் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர். இறந்தவனுடைய உடலைத் தம் எதிரே கிடத்திப் பிள்ளையார்,