பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 85 வழி நின்று ஆராயின் இவ்வாதங்கள் சரியானவையே யாகும். தத்துவ வாதியின் இந்த வாதங்கள் அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து காணப்பெற்றவை. ஆனால் பக்தனைப் பொறுத்தமட்டில் நிலைமையே வேறாகும். பிறர் துயரம் துடைக்க முன்வரல் வேண்டும். அத்துயரத்தின் காரணம் நியாயமானதா, தற்காலிக மானதா, நிலைபேறுடையதா அதனைத் தான் துடைக்க முடியுமா என்பன போன்ற வினாக்கள் பக்தனைப் பொறுத்தமட்டில் தோன்றுவதே இல்லை. தன்னை ஒத்த உயிர் என்றே எல்லா உயிர்களையும் பக்தன் கருதுகிறான். புழு, பூச்சி, மனிதன் ஆகிய அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டிருத்தலின் அவை யாவும் அவன் திருமுன்னர் சமமானவையே யாகும் எனவே ஒர் உயிர்க்கு வரும் துயரம் உடனடியாக ஏனைய உயிர்களால் போக்கப் படவேண்டியதாகும். டோக்குதற்குரிய முயற்சிகளை மேற். கொள்ள வேண்டியது பார்க்கும் உயிரின் கடமையாகும். போக்கும் முயற்சி வெற்றி பெறுமா தோல்வியுறுமா என்ற வினாவிற்கு இடமே இல்லை. முயற்சி பலிக்க வில்லையானால் அடுத்துச் செய்யப்படவேண்டியது யாது என்பதையும் பக்தன் நன்கு அறிவான். தன்னால் போக்க முடியாத துன்பத்தைப் பெற்று வருந்தும் உயிரின் துன்பத் தைத் தானும் ஏற்று வருந்துவான். இதுவே பக்தனுடைய வாழ்க்கை முறை. மனுநீதிச் சோழன் பக்தன் வாழ்வு மேற்கொண்டவன். ஆனால் அறிவற்ற மூடபக்திக்காரன் அல்லன். தன் அறிவு' கொண்டு நன்கு ஆய்ந்து அமைச்சர்களிடம் இதோ பேசு கிறான். கழுவாய் தேடுதல்தான் வழக்கமாகும் என்று பேசிய அமைச்சர்களை நோக்கி. 'வழக்கு என்று நீர்மொழிந்தால் மற்று அதுதான் வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்து அலறும் கோவுறுநோய் மருந்தாமோ?