பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ) அ. ச. ஞானசம்பந்தன் போல் போற்றாக் கடை?” (315) என்ற குறள், பக்தர்கள் வாழ்வில் முழுவதுமாக இடம் பெற்றுவிட்ட ஒன்றாகும். நம்மில் பலருங்கூட இக்குறளைக் கூறிக் கொண்டு பிறர் நோயை நமக்கு வந்ததுபோலப் பாவித்துக் கொண்டு பேசுகிறோம். இன்னுங் கூறப்போனால் பிறர் துயரத்தில் பங்கு கொள்வதாகவும் பேசிக் கொள்கிறோம். உண்மை யில் பிறர் துயரத்தில் பங்கு கொள்வது என்றால் என்ன? வாயினால் அவர்கட்கு நம் வருத்தத்தை, அனுதாபத்தைத் தெரிவிப்பது பங்கு கொள்வதாகாது. உதாரணமாக ஒன்றைக் காணலாம். - - மனுநீதிச் சோழன் வரலாறுபலரும்அறிந்த ஒன்றுதான் அரசனின் காதல் மகன் பசுங்கன்றுக்குட்டி ஒன்றின்மேல் தேரை ஏற்றிக் கொன்றுவிட்டான். அதனால் விளைந்த விளைவைத் தவிர்க்க அமைச்சர்கள் பல்வேறு வழிகளைக் கூறுகின்றனர். அவற்றுள் முக்கியமான ஒன்று கழுவாய் (பிராயச்சித்தம்) செய்யவேண்டும் என்பதாகும். பசுங் கன்றைக்கொன்ற பாவம் போக்க யாவரும் வழி கூறினரே தவிர, பசுவினுடைய துயரம் போக்கப்பட வேண்டும் என்பதுபற்றி யாருமே கவலையுற்றதாகத் தெரியவில்லை. இந்நிலையில் தத்துவவாதியும். பக்தனும் வேறு வேறு வழியை மேற்கொள்வர். தத்துவவாதி இறப்பினை யாரும் தடுக்க முடியாது என்பதையும் பசுங்கன்று, உயிர் வருக்கத்தில் மனித உயிருக்குத் தாழ்ந்த நிலையில் இருப்பது என்பதையும் அறிகின்றவனாதலின் பசுங்கன்றுக் காகவோ அதன் தாய்ப் பசுவின் துயர் துடைக்கவோ மனித உயிரைத் தரவேண்டும் என்று கருதமாட்ட்ான். மேலும் மனித உயிரையே அதற்குப் பதிலாகத் தந்தாலும் தாய்ப் பசுவின் துயர் துடைக்கமுடியாதே; தாய்ப்பசு வருந்துவதுபோல மன்னனும் வருந்தலாமே தவிர அவன் அத்துயரைத் தானும் ஏற்றுகொளவதால் பசுவிற்கு என்ன பயன் விளையப் போகிறது? இவற்றை எல்லாம் தருக்க