பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 83 வீரனும், தீநெறிக் கடும்பகை கடிந்தவனும், உரகர் துயரம் ஒழித்தவனுமாகிய புத்ததேவனால் இது முடியாத தன்று. அப்படி இருக்க மகனை எழுப்பித் தாயின் துயரை ஏன் அகற்றக்கூடாது? தத்துவவாதி தருக்கமுறையில் எதனையும் காண்பான். தருக்கமுறையில் கண்டால் புத்தர் செய்ததில் தவறு ஒன்றும் இல்லை. ஒருவேளை இப்பொழுது அத்தாயின் மகனை எழுப்பிவிட்டாலும் பின்னர் என்றாவது ஒருநாள் இறக்கத்தானே வேண்டும்? எனவே அத்தாயை அத்தகைய ஒரு சூழ்நிலைக்குத் தயாராக்கல் வேண்டும். தத்துவ ஆராய்ச்சியில் துயரம், இன்பம் என்ற இரண்டுமே பொரு ளற்றவையாகும். சமதிருட்டியை அதாவது சுகம், துக்கம் இரண்டையும் ஒன்றாகக் காணும் இயல்பை, ஒவ்வொரு வரும் பெறல் வேண்டும். சமதிருட்டியில் தலை நின்றவராகிய புத்ததேவர் கருணை நிறைந்தவர்தாம். என்றாலும் வாழ்க்கையின் உண்மைகளை அனைவரும் அறிய வேண்டும் என்ற கருத் துடைய தத்துவ ஞானியாவார் அவர். ஒருவேளை அக் குழந்தை இறந்துபடாமல் நோயால் அவதியுற்றிருப்பின் கெளதமர் எவ்வாறேனும் அதற்கு உதவ முன் வந்திருப் பார். ஆனால் நோயால் துன்புறுதல் வேறு; இறந்துபடுதல் வேறு. இறந்துபோதலை, நிர்வாணம் அடைதலை விரும்பத்தகாத ஒன்றாகவோ, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவோ கெளதமர் கருதவில்லையாதலால் அதனைத் தவிர்க்க முயலவில்லை. துயரில் பங்குகொள்ளல் : பக்தர்களின் நிலை இதற்கு முற்றிலும் வேறானது ஆகும். அவர்களைப் பொறுத்தமட்டில் சம திருட்டியுடை யவர்களே எனினும் பிறர் துயரம் கண்ட ழி அவர்கள் அதனைப் போக்க முனையாமல் இருப்பதில்லை. அறிவி னால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய், தந்நோய்