பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 0 அ. ச. ஞானசம்பந்தன் தேவரிடம் தன் மகனைப்பிழைக்கச் செய்ய வேண்டு கிறாள். ஒரே மகனை இழந்த தாயின் துயரத்தைப் புத்த தேவர் அறியாதவரல்லர். துக்கம், துக்க உற். பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற மாபெரும் உண்மைகள் நான்கையும் கூறிய புத்தர், கருணைக் கடலாகிய புத்தர் பிறர் துயரம், அதுவும் தாயின் துயரம் எத்தகையது என்பதை அறியாதவரா?, அறிந்திருத்தும் தத்துவ ஞானியாகிய புத்தர் அவள் துயர் போக்க ஏனோ விரும்பவில்லை. அதன் எதிராக அவள் உலக இயல்பை அறிய வேண்டும், அறிந்து மனம் அமைதி யடைய வேண்டும் என்று கருதினார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று வாதாட வேண்டிய தேவை இல்லை. இறப்பு என்பது உலகிடை இயற்கையானதுதான். எனவே அதற்கு வருந்துவது அஞ்ஞானத்தால் ஏற்படுவதுதான். இந்த அஞ்ஞானத்தைப் போக்கி அத்தாயைத் துணிவுடை பவளாக ஆக்க வேண்டுமென்று கருதினார் புத்ததேவர். இதற்காக அவர் அத்தாயை நோக்கி, - . "தாயே நின் மனக்கவலை - ஒழிந்திடத் தக்க நல் மருந்தளிப்பேன்; சேயினை எழுப்பிடுவேன்-விளையாடித் திரியவும் செய்திடுவேன். நாவிய கடுகுவேண்டும் - அதுவுமோர் நாவுரி தானும் வேண்டும்; சாவினை அறியாத - வீட்டினில் தந்ததா யிருக்க வேண்டும்' -ஆசியசோதி -9, 35. என்று கூறினார்.ஒருவரும் சாகாத வீட்டிலிருந்து ஒரு படி கடுகு கொண்டு வந்தால் பையனை எழுப்பித் தருகிறேன். என்று பேசுகிறார் இவ்வாறு கூறவேண்டிய தேவை என்ன? இறந்தவரை எழுப்பித் தரக்கூடிய ஆற்றல் புத்த தேவரிடம் இல்லையா? உண்டு. மாரனை வென்ற