பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 81 உடன் ஆனான் இடம் விழிம்ழலையே' என்று பெரிய தத்துவ ஞானத்தை அழகாகப் பாடலில் பாடியவரும், வேதங்கள் காணமுடியாமல் நேதி (இது அன்று) என்ற சொல்லால் மட்டுமே குறிக்கக்கூடிய பரம்பொருளை 'இதோ என்று சுட்டிக் காட்டிய பேரளாளரும் ஆகிய திருஞானசம்பந்தர் உயிர்களிடம் எவ்வாறு வேற்றுமை பாராட்ட முடியும்? துயர் போக்குபவர்கள் : பசியால் வருந்துபவர்கள் துயரை மட்டும் இவர்கள் போக்க முயன்றனர் என்பதில்லை. பிறர்படும் துயரம் எது வாயினும் அதனைப் போக்க முயல்வதே இவர்கள் கடமை. ஒருவேளை அத்துயரைப் போக்கமுடியாவிடின் அத் துயரைத் தாமும் ஏற்றுக்கோண்டு அனுபவிப்பார்களே தவிர விட்டுச் செல்வதில்லை. இவை இரண்டுக்குமே அடியார்கள் வரலாற்றில் எடுத்துக் காட்டுகள் உண்டு. திருஞானசம்பந்தர் திருமருகல் என்ற ஊரில் இருக்கும் போது நடுயாமத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட் கிறது. ஊர் என்றிருந்தால் அழுகுரல் கேட்பது இயல்பு தான் என்று இருந்திருக்கலாம், அவ்வாறில்லாமல் அவள் ஏன் அழுகிறாள் என்பதை அறிந்து அதனைத் தீர்க்க விரும்புகிறார். ஆனால் அப்பெண்ணின் அழுகைக்குக் காரணமாயமைந்தது அவள் கணவன் விடம் தீண்டி இறந்துவிட்டமையாகும். இறந்துவிட்டான் என்று அறிந் திருந்தும் அவள் துயர் தீர்க்க வேண்டும் என்று விரும்பு கிறார் இப்பக்தர். இறந்தவனின் அருகே சென்று இறைவனை நோக்கிப் பாடி அவன் உயிர் பெறச் செய்கின்றார். தத்துவ ஞானியின் செயல் : பக்தர்கட்கும் தத்துவ வாதிகட்கும் இந்நிலையில் ஒரு வேறுபாடு இருத்தலைக் காண்டல் கூடும். இதேபோலத் தன் மகனை இழந்த ஒரு தாய் தத்துவ ஞானியாகிய புத்த த.ப.-6