பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இ. அ. ச. ஞானசம்பந்தன் வந்துண்ணலாம் என்று பிள்ளையார் அழைத்தார் என்று கூறவந்த சேக்கிழார், நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல்விருந்தாய் உண்ணுதற்கு வருக (ஞான. புரா. 566) எனக் கூறினராம். இச் சொல்லில் உள்ள அழகை அறிதல் வேண்டும். நாதன் விரும்பு அடியார் என்றால் அதனை இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும், மூன்றாம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். அதாவது நாதனை விரும்புகின்ற அடியார்' என்றும் "நாதனால் விரும்பப்பட்ட அடியார்' என்றும் பொருள் கொள்ளலாம். - முதல் முறைப்படி பார்த்தால் இறைவனை விரும்பும் அடியார் இவ்வுலகில் குறைவாகவே இருப்பர். இரண் டாவது முறையில் கொண்டால் நாதனால் விரும்பப் பட்ட அடியார்' என்று பொருளாகும். இறைவன் யாரைத்தான் விரும்பாமல் ஒதுக்குகிறான்? இறைவனே ஒதுக்க நினைந்தால் அந்த உயிர் இந்த உலகிடை வாழ முடியுமா? எனவே நாதனால் விரும்பப் பட்ட அடியார் என்று பொருள் கூறினால் உலகிடை வாழும் எல்லா உயிர்களும் என்றே பொருள் கொள்ள நேரிடும். அதாவது அந்த ஊரிலும், சுற்று வட்டாரத் திலும், ஏன்? உயிர்கள் எங்கிருந்தாலும் அவை அனைத் தும் இறைவனால் படைக்கப்பெற்று அவனால் அன்பு செய்யப்படுபவை ஆகலின் யார் வேண்டுமானாலும் வந்து உண்ணலாம் என்பதே இதன் பொருள். பழைய பாடல்கட்கும் பொருள் காணும்போது கவனமாக, இருத்தல் வேண்டும். வேறுபாடு இல்லை : பக்தர்கள் பிற உயிர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் வேறுபாடு பாராட்டுவதில்லை.ஒதாதுணர்ந்த பெரியவரும், சிவஞானசம்பந்தர் ஆகியவரும் வேறாய்.