பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 79 கலிக்கம்பர் என்பவர் இவ்வாறு தொண்டு செய்த, அறுபத்து மூவருள் ஒருவராவர். ஒருநாள் இவரை நாடி ஒரு வேடதாரி வந்துற்றார். அவர் இவரிடம் முன்னர் ஏவலாளராய் இருந்து விட்டு விட்டுப் போன ஒருவர். இப்பொழுது அடியார் வேடம் தாங்கி வந்துள்ளார். அவர் யார் என்பது கலிக்கம்பருக்கு நன்கு தெரியும். எனினும் ஏனைய அடியார்களை உபசரிப்பது போலவே அவரையும் உபசரித்தார். தம் மனைவியார் தண்ணிர்விட, அடியாரின் கால்களைக் கலிக்கம்பர் கழுவினார். ஆனால் தண்ணிர் விடும் அம்மையார் அடியார் யார் என்று பார்ப்பதற்காக அண்ணாந்து பார்த்தார். உடனே கையால் அவர்தம் அடிபிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் செய்யாது அகன்ற தமர்போலும்' (கலிக் கம்பர்-7) என்று நினைந்தார். இந்நினைவு தோன்றிய வுடன் அவர் தண்ணிர் விடுவது தடைப்பட்டது. அடியார் கால்களைத் தாம் கழுவும்போது தண்ணீர் தடைப்பட்ட மையின் அதன் காரணத்தை அறிய வேண்டிக் கலிக்கம்பர் தண்ணிர் ஊற்றும் மனைவிமார் முகம் நோக்கினார்; ஒரு. வினாடியில் மனைவியின் எண்ண ஒட்டங்களை அறிந்து, கொண்டார். சிவவேடத்தைப்பற்றி மட்டும் கவனம் செலுத்தாமல் அதனை அணிந்தவர் யார் என்ற ஆராய்ச் சியில் ஈடுபட்ட மனைவியார் கைகளை வாளால் வெட்டி விட்டார் கலிக்கம்பர். இந்த வரலாறு ஒரு பேருண் மையை விளக்கி நிற்கிறது. நாதன் விரும்பு அடியார் : யாருக்குத் தொண்டு செய்கிறோம் என்ற வினாவை பக்தர்கள் எழுப்புவதே இல்லை, சிவனடியார்கட்கு. மட்டும் சோறுபோட வேண்டும் என்று ஞானசம்பந்தரோ, நாவரசரோ நினைத்திருக்கவே முடியாது. அவ்வாறு நினைந்திருப்பின் திருவிழிமிழலையில் உள்ளார் அனை வருக்கும் உணவு அளித்திருக்க முடியாது. எல்லோரும்