பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அ. அ. ச. ஞானசம்பந்தன் கூரவந் தெதிர் கொண்டு கைகள் குவித்து நின்று . செவிப்புலத்து ஈரமென்மது ரப்ப தம்பரிவெய்த முன்னுரை செய்த . பி ன் " 'கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே மண்டு காதலின் ஆதனத்திடை வைத்து அருச்சனை செய்தபின் உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத்திறத் தினில்....' -இளையான் 3,4 என்று பாடுவது நோக்கற்குரியது. இப்பாடலுக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் இறையடியார் யாராக இருப்பினும் என்று பொருள் கொள்கின்றனர் அடியார் என்ற பிறகு யாராக இருப்பினும் என்பது பொருளற்றது. நேர வந்தவர் யாவராயினும் ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதன் தன்மையால் (இறையடியார் என்று கருதி) என்பதே கொண்டு கூட்டு நேர வந்தவர் யாவராயினும் அவரைக் கொணர்ந்து உபசரித்துச் சோறிட் டார் எனில் அடியவர்கள் மட்டுமே உபசரிக்கப் பட்டனர். என்பது யாங்ங்ணம்? உண்மை அடியார் ஆராய்ச்சி இல்லை இதனையடுத்து ஒன்றையுங் காண்டல் வேண்டும். அடியார்கட்குரிய கோலம் புனைந்திருந்ததாலே இவர்கள் அவர்களைப் போற்றினர். இக்கோலம் வெளிவேட மாயினும் அதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தெரிய, வில்லை. தங்கள் வாழ்வில் திருநீறுங் கண்டிகையும் உயர் வானவை என்றும் கொண்டுவிட்ட பிறகு அவற்றை அணிந்தவர் யாவராயினும் அவர்களை அடியார் எனவே கருதினர் உண்மைப் பக்தர்கள்.