பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 77 யாகும். எனவேதான் பெரியபுராணத்திற் காணப்பெறும் நாயன்மார்கள் பலர் பசிப்பிணியைப் போக்க முயன்றதா கவே வரலாறு பேசுகிறது. யாருக்கு உதவினர்? பக்தர்களும் அடியார்களுமாகிய இவர்கள் பிறர் பசி போக்கினர் எனில் அப்பிறரை அடியவர் என்றும் மற்றை யோர் என்றும் பிரித்துப் பார்த்தனரா? பெரிய புராணம் போன்ற நூல்களில் அடியார்களின் பசிப்பிணியைப் போக்கியதாகவே வரலாறு பேசுகிறது. வைணவ வரலாறு களிலும் பாகவதர்கட்கு உபகாரம் செய்ததாகவேதான் பேசப்படுகிறது என்றால் இவர்கள் உபகாரம் செய்வ திலும் பிரித்து (discrimination) அறிந்து செய்தனரா என்பது ஒரு வினா. மக்கள் கூட்டத்தைத் தக்கவர், தகா தவர் என்று பிரிக்கும் அதிகாரம் பரம் பொருள் ஒருவ ருக்கே உண்டு. அவ்வாறு இருக்க இவர்கள் யார் பிரிவினை செய்ய? என்று கேட்கப்படலாம் இம்மாதிரி இடங்களில் இவர்கள் பயன்படுத்துஞ் சொற்களுக்கு என்ன பொருள் என்பதனை ஆராய்ந்து கொளல் வேண்டும். அடியவர்கள் என்றும் பாகவதர்கள் என்றும் இவர்களாற் குறிக்கப்படு பவர் சாதாரண மக்களேயாவர். காரணம் ஒன்றுண்டு. யாவரும் இறைவன் படைப்பு என இவர்கள் நினைப்ப தால் காணப்படும் யாவரும் அடியார்களாகவே இவர் கட்குக் காட்சியளிக்கின்றனர். இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் சேக்கிழார் இதுபற்றி விளக்க மாகக் குறிப்பிடுகின்றார். - இளையான்குடிமாறர் யாருக்கு உணவு அளித்தார் எனக் கூறவந்த சேக்கிழார், - - ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பதன் தன்மையால், நேரவந்ததர் யாவராயினும் நித்தமாகிய பத்திமுன்