பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அ. அ. ச. ஞானசம்பந்தன் பணியே தவம்: இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்துத் தாம் செய் கின்ற எப்பணியும் அவனுடைய பணியே என்ற எண்ணத். துடன் செய்யும் பொழுது அதுவே தவமாகிறது. இவர்கள் இன்ன பணியைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. எதனைச் செய்யினும் அது தவமெனவேபடும். இதற்குரிய காரணம் என்னை? ஏனை யோர் தாம் செய்கிறோம் என்ற தற்போதத்துடன் செய். தலின் அதன் பலாபலன்கள் அவர்கட்கே, உரிமையா கின்றன. பக்தர்கள் சித்தம், மனம் என்ற இரண்டையும் இறைவன்மாட்டு வைத்திருத்தலின் அவர்கள் கருவி கரணங்கள் பதிகரணங்களாகவே ஆகிவிடுதலின் அவர்கள் செயல்கள் அனைத்தும் தவமாகவே ஆகிவிடுகின்றன. இதனையே மணிவாசகர் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' (தோணோக்கம். 7) என்று கூறுகிறார். எனவே பக்தர்கள் மக்கள் தொண்டு செய் யினும் அது மகேஸ்வரன் தொண்டாகவே கருதப் பெற்றது. - பக்தன் வேலை இதுவா? இந்நிலையில் ஒர் ஐயம் தோன்ற இடமுண்டு. பக்தர்கள் என்றும் அடியார்கள் என்றும் குறிக்கப்பெறும் இவர்கள் சாதாரண மக்கள் பிறர் பசிப்பிணியைப் போக்க முயல்வது போல் தாமும் முயலவேண்டுமா? என்று நினைக் கலாம். மக்களுக்கு நல்லுபதேசம் செய்வதுதான் இவர் களுடைய கடமை என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், வறுமையுற்று பசிப்பிணியால் வாடும் மக்களுக்கு இறைவன் ரொட்டித்துண்டு வடிவாகவே காட்சியளிக் கிறான் என்றார் விவேகானந்தர். எனவே இறைவன் பற்றி உபதேசம் செய்வதற்கு முன்னர் அவர்களுடைய பசியைப் போக்க வேண்டியதே பக்தர்களின் முதற்கடமை