பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 75 மக்கள் தொகையால் வகுத்து ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் எனப் பார்ப்பது அறிவு வாதியின் வேலை. இறைவன் திருவருளில் தளரா நம்பிக்கை கொண்டு அப்பத்தைப் பங்கிடத் தொடங்குவது பக்தனின் வேலை. யாருடைய பொறுப்பு? பக்தன் எல்லையற்ற நம்பிக்கையுடன் சோறு போடத் தொடங்கினாலோ அப்பத்தைப் பங்கிடத் தொடங்கினா லோ அது வளர்ந்துகொண்டே வரும். எவ்வாறு?இவர்கள் யாரிடம் நம்பிக்கை வைத்து இப்பணியைத் தொடங் கினர்? யாண்டும் நிறைந்துள்ள பரப்பொருளிடம் நம்பிக்கை வைத்துத்தானே இப்பணி தொடங்கப் பெற்றது! அவ்வாறானால் அது செவ்வையாக முடிய வேண்டிய பொறுப்பு யாரைச் சேர்ந்தது? இறைவனையே அன்றோ? எனவே இறைவன் அது முடியுமாறு பார்த்துக் கொள்கிறான். இதன் எதிராகத் தன் அறிவின் ஆற்றலை அறிந்து பணியில் புகுகின்றவன் தன்னையே நோக்கித் தொடங்கு கின்றான். எனவே இம்மாதிரி நேரங்களில் இறைவன் இவன் பணியில் தலையிடுவதில்லை. பாதித் தன்னம்பிக் கையும் பாதி இறை நம்பிக்கையும் வைத்துத் தொடங்கி னாலும் இறைவன் அதில் தலையிடுவதில்லை. திரெளபதி துகில் உரியப்படும்பொழுது தன் கைகளை நம்பிப் புடை வையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றவரை கண்ணன் அருள் கிட்டவில்லை தன்முயற்சி பயன்தாராது என்று கண்டு முற்றிலும் தன்னை இறைவனின் அடைக்கலமாகத் (absolutə surrender) Gjögl கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கியவுடன் கண்ணன் பொறுப்பு ஏற்படுகிறது. எனவே புடைவைகளை வளரவிடுகிறான். பக்தர்கள் முழுநம்பிக்கையுடன் எப்பணியையும்தொடங்கு கி ன்றனர். -