பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இ. அ. ச. ஞானசம்பந்தன் என்று முயன்று போக்கியும் விடுகின்றார். இலவசமாகச் சோறுபோடும் இவர்கள் உணவு நேரா நேரத்திற்குப் படைக்கப்படுகின்றதா என்று ஏன் கவலைப்பட வேண்டும்? அதுவே பக்தர்களின் அருள் உள்ளமாகும். ஐந்து அப்பத்தை நூற்றுக்கணககானவர்கட்குப் பங்கிட்டுத் தந்த இயேசு பெருமானும், விழிமிழலையில் பஞ்சந் தீருகின்ற வரை உணவூட்டிய திருஞானசம்பந்தப் பெருமானும் நாவரசர் பெருமானும் பக்தர்கள் என்ற தொகுப்பினுள் அடங்குவர். மக்கள் துன்பத்தைப் போக்கு வதே மகேஸ்வரனுக்கு உகந்த பணியாகும் என்பதைக் கண்டு கடைபிடித்த பெருமையுடையவர்கள் இவர்கள். அறிவின் துண்ைகொண்டு இந்தப் பிரச்னையை அணுகி இருந்தால் இங்ங்னம் மடம் வைத்துச் சோறு போட் டிருக்க மாட் டார்கள் இவர்கள்? ஏன்? பஞ்சம் வந்தது என்றால் அறிவின் துணைகொண்டு அதன் காரணத்தை ஆயத் தொடங்கினால் மழை இன்மை, மழை இருந்தும் பூச்சிகள் முதலியவற்றால் பயிர் அழிதல், இவை இரண்டும் இல்வழியும் மக்கள் சோம் பரின் விளைவு, இவை மூன்றும் இல்வழியும் நிலமுடையார் இல்லார்க்கு வழங்காமை இவ்வாறு பஞ்சத்திற்குரிய காரணங்களைப் பெருக்கிக் கொண்டே செல்லும் அறிவு: இங்ங்னம் பஞ்சத்திற்குரிய காரணத்தைப் பகுத்து ஆராய்ந்து கொண்டே சென்று இறுதியில் ஒருவாறு கார ணத்தைக் கண்டு அதனைத் தடுப்பதற்குரிய வழிமுறை களையும் அதே அறிவு ஆராயத் தொடங்கி வழி துறை களையும் கண்டு பஞ்சம் நீங்கப் பாடுபடும். இம்முறை யிலும் பஞ்சம் தீர்க்கப்படலாமேனும் அதற்குள் பசியால் வருந்தி நிற்கும் நூற்றுக்கணக்கான மக்கள் பரலோகம் சேர்ந்துவிடுவர். எனவேதான் பக்தர்களாகிய இவர்கள் அறிவின் துணைகொண்டு காரணத்தை ஆய்வதை விட்டு விட்டு உடனடித் தேவை எதுவோ அதில் ஈடுபட்டனர். கையிலுள்ள அப்பத்தின் எண்ணிக்கையை குழுமியுள்ள