பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் © 73° 'கானுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போதெலாம் பயந்தேன்' 米 泳 米 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்ற்ரைக் கண்டுளம் பதைத்தேன்' — 57, 60, 62. அருளாளர் செயல் : சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் மட்டும். இந்நிலையில் இருந்தார் என்று நினைய வேண்டா, ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும் இதே மன நிலையில் இருந்தார் என்பதை அறிகிறோம். திருவீழி மிழலையில் ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சேர்ந்: திருந்த காலையில் அவ்வூரில் பஞ்சம் தாண்டவமாடியது. இறைவன் அடியார்களாகிய இவர்கள் மழை இன்மைக்குக் காரணம் பக்திக் குறைவே என்று கூறிவிட்டுப் போய். இருக்கலாம். ஆனால் அவர்கள் யாது செய்தனர்? மடம் ஒன்று வைத்து அவ்வூரிற் பஞ்சம் தீர்கின்றவரை எல்லா மக்களுக்கும் உணவு படைத்தனர். நெட்டுவசமான ஊராகலின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு. மக்கள் வந்து உணவுண்டு மீள்வதாயின் அதன் பயன் முற்றிலுமாக விளையாது என்று கருதிய இவர்கள் தனித். தனியே வீதியின் இருஓரங்களிலும் மடம்அமைத்து உணவு ஊட்டினர். மேலும் தத்தம் மடங்களில் நேரா நேரத்திற்கு உணவு படைக்கப்படுகிறதா என்பதையும் பார்வை: இட்டனர். திருஞானசம்பந்தர் மடத்தில் நேரங்கழித்து உணவு படைக்கப்பட்டமையின் அதன் காரணத்தை அறிய முற்படுகிறார் அச் சிறிய பெருந்தகையார்.' காரணத்தை அறிந்தவுடன் அதனைப் போக்கவேண்டும்