பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் அ 91 பகுதி செல்வந்தேடும் முயற்சியில் செலவழிந்து விட்டது. ஏதோ ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை அடைய முயன்றால் அம்முயற்சியில் ஈடுபடும் வரை மனத் திற்கு ஒரு வேலை இருத்தலின் அமைதி இன்மை தோன்றாது. ஆனால் இளைய தலைமுறையைப் பொறுத்தவரை இம்மனத்துயர் மிகப் பெரிதாக விடிந்தது. செல்வத்தைத் தேடுவதில் முனைந்திருந்தவர்கட்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தது. அக்குறிக்கோள் உயர்ந்திராமல் கேவலம் செல்வத்தைத் தேடிக் குவித்து அதன் மூலம் சிறப் பெய்தலாம் என அவர்கள் எண்ணினர். போட்டி மிகுந்த &Qpg|Trull&#363 (competitive society) @g, gossam G. Blussuu மானதேயாகும். அவ்வாறு சேகரித்தவர்கள் அச்செல்வத் தைப் பயன்படுத்தும் நிலைவரும்பொழுது அதனைப்பயன் படுத்த முடியாத வயதை அடைந்துவிட்டதை உணர்ந் தனர். இதனிடையே மற்றொரு எதிர்பாராத தொல்லை -யும் வந்துற்றது. தாம் இளமையில் அனுபவிக்க முடியாமல் வறுமையில் உழன்றதை மனத்துட்கொண்டு தங்களுடைய பிள்ளைகளாவது இன்பமாக வாழட்டும் என்ற கருத் துடன் அப்பிள்ளைகளின் தேவைக்கு மிகவும் அதிகமாகப் பணத்தை வழங்கலாயினர். மேலும் வயதும் அனுபவமும் நிறைந்த அவர்கள் பணத்தைச் செலவழிக்கும் முறை வேறு; அதிலும் தாமே முயன்று சேர்த்த பணத்தைச் செலவழிக்கையில் அது ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட் டிருந்தது. ஆனால் இளந்தலைமுறையினர், எதிர்பாரா விதமாக ஏகப்பட்ட பணம் கையில் வந்தவுடன் கட்டுப் பாடு அற்றமுறையில் செலவு செய்யத் தலைப்பட்டனர். இரு தலைமுறையினரும் இவ்வாறு செலவு செய்யத் தொடங்கவே வாணிபம் வளர்ந்தது. உற்பத்தி பெருக லாயிற்று. தேவையானவை எவை தேவையற்றவை எவை என்ற ஒர் எண்ணம் வளரலாயிற்று. எல்லாவற்றையும்