பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 0 அ. ச. ஞானசம்பந்தன் வாங்கிவிட வேண்டும் என்றால் அதற்கேற்ப நிரம்பப் பொருளைத் தேடவேண்டும். இதனிடையே உற்பத்தி யாளரும் தாம் பொருளைப் பெருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உற்பத்தியைப் பெருக்கினர். தேவையற்ற பொருளை உற்பத்தி செய்கின்றவர்கள் கூட அவை மிகுதி யும் தேவை என்ற எண்ணத்தை வாங்குவோர் மனத்தில் விதைக்கத் தொடங்கினர். விளம்பரங்களில் மனவியலாரின் (psychologists) உதவிக்கொண்டு புதிய விளம்பர முறை கள் கையாளப் பெற்றன. எனவே ஏராளமான தேவைகள் வளர்ந்தன. ஏராளமான உற்பத்திகள் பெருகின. ஒரு விஷவளையம் (vicious circle) உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. - யானைக்கால்காரன் தன் கால் வலுவடைந்து பெருத். துள்ளது என்று நினைத்து மகிழ்ந்தால் எவ்வாறு இருக் குமோ அதுபோல இந்தப் பொய்யான பொருளாதார ourgosy (false economic prosperiety) flansbóL part யிற்று. எத்துணைப் பொருளைச் சேகரித்தும் மனதில் அமைதி ஏற்படவில்லை என்பதை மூத்த தலைமுறையினர் காணத் தொடங்கினர். வீட்டில் இரண்டாவது ஒரு கார் இருப்பது தம்முடைய மதிப்பின் அடையாளம் (status, symbol) என்று கருதி உழைத்தவர்கள் நாலாவது காரைப் பெற்றுக்கூட மனத்தில் அமைதி ஏற்படாமல் தவிக்கத் தொடங்கினர். சேகரிப்பதற்குரிய முயற்சியே இல்லாமல் பெரும் பொருள் கையில் இருப்பதால் அத்தகைய வாழ்வில் அலுப்பு ஏற்பட்டது இளந்தலைமுறையினர்க்கு. இரண்டு தலைமுறையினரும் வேறு வேறான காரணங்களால் உந்தப்பட்டு ஒரே நிலைக்கு வந்து சேர்ந். தனர். இரு தலைமுறையினருக்கும் மன அமைதி என்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது. வாழ்க்கை கேவலம் ரொட்டித் துண்டால் மட்டும் நிரம்பி விடுவதில்லை என்ற உண்மை புலப்படலாயிற்று. மூத்த தலைமுறை வெறி