பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 88 -யுடன் பொருள் தேடுவதிலும், இளந்தலைமுறை அதே வேகத்துடன் பொருளைச் செலவழிப்பதிலும் ஈடுபட் டிருந்த காரணத்தால் வாழ்க்கையில் வேறு எதற்கும் மதிப்புத் தந்து பழக்கப்படவில்லை. கண்ணிற்குத் தெரி வதும் தொட்டு அனுபவிப்பதும் ஆகியவற்றிற்கு மட்டுமே மதிப்புத் தந்து பழகிவிட்டமையின் நுண்மையான மதிப் புடைய பொருள்கள் (abstract values) எவை என்பது பற்றிக் கவலைப்பட்டுப் பழக்கமே இல்லாமற் போயிற்று. அன்பு, பக்தி, அழகு, உண்மை, இரக்கம் என்பவைபற்றி யாரும் கவலைப்படவே இல்லை. கேளிக்கை, வேகம், சப்தம் என்பவற்றில் இன்பங்கண்ட அந்தச் சமுதாயம் அமைதி, நிசப்தம், இயற்கை அழகு என்பவற்றில் இன்பங் கண்ட தோரா (Thorue) போன்ற ஞானிகளை எள்ளி நகையாடியது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முடிய முன்னர்க் கூறிய நாடகம் நடைபெற்றது. எந்த ஒன்றும் மேலே சென்றால் கீழே வந்தே தீரல் வேண்டும் அல்லவா? அதேபோல் இந்த முன்னேற்ற வெறிக்கு எதிர்ச் சுழற்சி (Reaction) தோன்றலாயிற்று. 1960 முதல் எதிர்ச் சுழற்சி மிக வேகமாகப் பரவிற்று. மூத்த தலைமுறையினர் அமைதி கிட்டாமையின் அதனை மதுவில் தேட முனைந் தனர். இன்பத்தை நாடுதற்காக அளவுடன் குடித்தது போக இப்பொழுது தம்மை மறப்பதற்காகக் குடிப் பழக்கத்தை மேற் கொள்ளலாயினர். சிறுகுடியாளர்கள் பெருங்குடியாளராக மாறினர். - இளைஞர் வாழ்க்கை முறை : இளஞ் சமுதாயத்தினருக்கு இதுவும் ஒத்து வரவில்லை. இளமையிலேயே அதிகப்பணம் புழங்கிய காரணத்தாலும் போட் டி மனப்பான்மையாலும், வாழ்க்கையில் வேறு குறிக்கோள் இன்மையாலும் மிக இளம் பருவத்திலேயே