பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 0 அ. ச. ஞானசம்பந்தன் குடிக்கத் தொடங்கி ஒரு பருவம் வரும்பொழுது எததகைய மதுவும் மயக்கத்தை தரமுடியாத நிலையை அடைந்து விட்டனர். இந்நிலையில் அமைதி வேண்டும் என்று விரும்பிய இளஞ் சமுதாயம் மதுவைக் கைவிட்டு வேறு துறைகளில் நாட்டஞ் செலுத்தியது. மூத்த தலைமுறை யினருக்குக் கை கொடுத்த மது இளைய தலைமுறை யினரைக் கைவிட்டு விட்டது. இந்நிலையில்தான் கஞ்சா, அபின் என்பவை ஹரீன், ஹஷ்ஷ் என்ற பெயர்களில் அவர்களை ஆட்கொள்ளப் புறப்பட்டன. இவை பல்வேறு வடிவங்களில் தோன்றிப் புகையாகவும் ஊசி மருந்தாகவும் உடல் புகுந்து ஆட் கொண்டன. எல். எஸ் டி. என்ற இராசாயன மருந்தின் மூலம் நேரே இங்கிருந்தபடியே சுவர்க்கத்தைக் காண முற்பட்டது இளைய தலைமுறை. ஆசிய நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் உடல்நிலை ஓரளவு எதையும் தாங்கும் வலுப்பெற்று வளர்ந்து உள்ளது. ஆனால், பெருஞ் செல்வத்தில் வாழும் அந்நாட்டு இளைஞர் எதனையும் எதிர்த்துப் போராடும் எதிர்ப்பு சக்தியை மிகக் குறைவாகவே பெற்றுள்ளனர். எனவே அபின், கஞ்சா போன்றவைகள் அவர்கட்குச் சிறிய அளவிற்கூட வரப்பிரசாதமாக அமைந்தன. சிறிய அளவில் தொடங்கி, நாளாவட்டத்தில் பழைய அமைதி (இது மனத்தை மந்த மாக்கும் போலி அமைதி என்பதை அவர்கள் இன்னமும் உணராதது வருந்தத்தக்கதே) கிட்டாமையின் அளவை மிகுத்துக் கொண்டே வந்து இறுதியில் அதற்கு அடிமை யாகி விட்டனர். இதில் வருந்தத் தகுந்த ஒன்று என்னயெனில் இந்தப் பழக்கம் கீழை நாடுகளிலிருந்தே அங்குப் பரவியது. கீழை. நாடுகளில் உண்மைத் துறவிகள் சிலரும், போலித் துறவிகள் பலரும் இவற்றைப் பயன்படுத்தியதுண்டு. ஆனால் எதிலுமே அளவுடன் இருந்து பழக்கப்பட்ட