பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 95. வர்கள் கீழை நாட்டார். எதிலுமே கடைசிவரை சென்று பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பவர் மேலை நாட் டார். எனவேதான் இந்தப் பழக்கத்திலுங்கூட அவர்கள் 10 ஆண்டுகளுக்குள் மீட்டு வரமுடியாத துாரம் சென்று விட்டனர். கீழை நாட்டார் இவற்றை அளவறிந்து பயன் படுத்தும் பொழுது ஒரளவு பொறி புலன்களைக் கட்டுப் படுத்த இவை பயன்பட்டன. முன்னரே மனவடக்கம் முதலியவற்றிற் பழக்கப்பட்டவர்கட்கு இப்பழக்கம் பக்கத் துணையாக இருந்தது. மனவடக்கம் நன்கு கைவரப் பெற்றவுடன் இப்பழக்கத்தை உதறி விட்டனர் கீழை நாட்டில் இதனை மேற் கொண்டிருந்தவர்கள். இவ்வாறு கூறுவதால் இவற்றைத் தவறாகப் பயன்படுத்து பவர் இந்நாடுகளில் இல்லை என்று கூறுவதாக நினைய வேண்டா. அவ்வாறு செய்பவர்கள் பலருண்டு. ஆனால் இங்குக் குறிப்பிட்டது உண்மைத் துறவிகளையேயாகும். நெருப்பு தீயதன்று. அதனை அடக்கி ஆள்பவன் பயன்படுத்தினால் குளிர் காயவும் சமையல் செய்யவும் பயன்படும். அறியாமையும், இளமையும் உடையவன் பயன்படுத்தினால் சமையல் ஆவதற்குப் பதிலாக வீடு பற்றி எரிந்து போகும். அதுபோலவேதான் மேனாடுகளில் இப்பழக்கம் அந்நாட்டையே கெடுத்து உயர்நிலைப் பள்ளிகளிற் படிக்கும் இளஞ் சிறார்களையும் பாழாக்கி வருகிறது. - . எதையெடுத்தாலும் உற்பத்தியைப் பெருக்கிப் பொரு ளிட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகுந்த சமுதாய் மாகலானும் அவர்களுள் ஒரு சிலர் இதனைத் தம் வாணிபப் பொருளாகக் கொண்டு பொருளிட்டத். தொடங்கி விட்டனர்.ஈட்டல் என்ற சொல் இங்குப் பயன் படாது. பொருளைக் குவிக்கத் தொடங்கினர். இவ்வாறு சேகரிக்கப்படும் பொருள் தவறான வழியில் வந்ததா