பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ6 0 அ. ச. ஞானசம்பந்தன் பயிற்றே. ஒரு சமுதாயம் முழுவதையும் கெடுத்துத் தேடிய தாயிற்றே என்ற எண்ணமே அவர்களிடைத் தோன்றுவ தில்லை. தீதின்றி வந்த பொருள் தான் நிலைக்கும் என்ற எண்ணமோ அழக் கொண்ட எல்லாம் அழப் போம் என்ற எண்ணமோ இக்கொடிய வழியிற் பொருள் சேகரிப்பதற்குத் துணிந்தவர்களிடம் தோன்றவே இல்லை. சமய வாழ்க்கையில் ஒரு சிறிதேனும் ஈடுபட்டிருந்தால் ஒரு சமுதாயம் முழுவதையும் கெடுக்கும் இத்தொழில் எத்துணைக் கொடியது என்பதை அவர்கள் நினைந்து பார்த்திருப்பர். அன்றியும் எவ்வாறாயினும் பொருளைச் சேகரிக்க வேண்டும். அதுவே வாழ்வின் குறிக்கோள்' என்று அந்தச் சமுதாயம் ஒரு நூற்றாண்டாகப் போற்றி வந்தது. எனவே இப்பொழுது திடீரென்று மாற்றம் வர வேண்டும் என்று விரும்பினால் அது எப்படி வரும்? வாழ்வின் குறிக்கோள் பொருள் சேகரிப்பதே என்று கொண்டு பணத்தைப் பூசித்து வந்த நாட்டில் இந்நிலை மாற வேண்டுமாயின் பணத்தினிடம் கொண்ட பக்தியை வெல்லக் கூடிய ஒரு குறிக்கோள் தேவைப்படும். அத்த கைய வலுவான ஒரு குறிக்கோளை மக்கள் முன் வைத்து அவர்கள் கவனத்தை அதில் திருப்பினாலொழிய இப்பழக் கத்தையோ, இதன் மூலம் பொருள் சேர்க்கும் கொடி யோர்களையோ திருப்ப முடியாது. அமைதி காணும் முயற்சியின் பயன் : இதனிடையே அந்நாடுகளில் தோன்றிய மற்றோர் இயக்கத்தையும் காண்பது பொருத்தமுடையதாகும். பொருள் சேகரித்து விடுவதால் மட்டும் மன அமைதியை நாடி விடமுடியாது என்பதைத் தெள்ளத் தெளிந்து கொண்ட இளஞ் சமுதாயத்தினர் சிலர் உலகஞ் சுற்றி வந்த பொழுது வறுமை மிகுந்த நம்முடைய நாட்டில் காணாத காட்சி ஒன்றை கண்டனர். ஒரு சில உண்மைத்