பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 6 97 துறவிகள் எல்லையற்ற அமைதியைப் பெற்று வாழ்வதைக் கண்டனர். இந்தத் துறவிகள் எத்துணைக் காலம் பொறி புலன் களை ஒடுக்கி வாழ்வதன் மூலம் இத்தகைய மனநிலை யைப் பெற்றுள்ளனர் என்பதைப்பற்றி அந்தப் பணக்கார இளைஞர்கள் கருதிப் பார்க்கவில்லை. அவர்கள் தேடித் திரியும் அமைதி இதோ இங்கே காணப்படுகிறது. இது எவ்வாறு கிடைத்தது என்று ஆய்வதற்கு நேரம் இல்லாமல், ஒரு பொருள் காணப்பெற்றால் அதனை உடனே தாமும் பெற்றுவிட வேண்டும் என்ற தம் நாட்டுக் கொள்கை அடிப்படையில் இத்துறவிகளை அண்டி அவர்களைப் போலவே வேடம் அணிந்து அமைதி நாட முற்பட்டனர். - பக்தி மார்க்கம் ஒன்றுதான் யாவரும் எளிதில் கடைப் பிடிக்கக் கூடிய வழி என்பதை அறிந்த நம் நாட்டுத் துறவிகள் அவர்களுக்கு பக்தி வழியையும் அதன் ஒர் உறுப்பான பஜனையையும் போதித்தனர். உணர்ச்சி வசப் படும் இளந்தலைமுறைக்குச் சிந்தையை அடக்கி ஞான வழியில் ஆராய்சி செய்தல் கடினமாகலான் பக்தி வழி அவர்கட்கு மிகவும் ஏற்றதாகப்பட்டது. இதுவே ஹரே கிருஷ்ணா கூட்டத்தார் தோன்றியதன் அடிப்படை .யாகும். ஆனால் போலிகளும் தீயவர்களும் ஒரு நாட்டிற்கு மட்டும் சொந்தமா? விமானம் வைத்துக் கொண்டிருக்கும் துறவிகள் நம்நாட்டில் மட்டும் இல்லாமலா போய் விட்டனர். அதிலும் கொழுத்த பணமுடைய நாட்டி லிருந்து உணர்ச்சி வசப்படட இளைஞர்கள் வந்துள் ளார்கள் என்றால் இந்தப் போலித் துறவிகட்குக் கொழுத்த வேட்டைதானே.இப்போலிகளைத் தொடர்ந்த .பலர் இறுதியில் அதில் பயன் ஒன்றும் காணாமையால் த.ப.-7