பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 e அ. ச. ஞானசம்பந்தன் வெறும் 'ஹிப்பி'களாக மாறி ஊர் ஊராகச் சுற்றுகின் றனர். ஹறிப்பிகளின் வாழ்க்கை ஒரளவு சமய வாழ்க்கையில் ஈடுபட்டு ஆனால் அதில் முற்றிலும் ஈடுபட முடியாமை யினால் வீணாகிப் போன வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கையில் ஈடுபட்ட இலட்சக்கணக்கானவர்கள் மேனாடுகளில் உண்டு. இளமையிலேயே சமய வாழ்க் கையில், போலிச் சடங்குகள் அல்லாத உண்மையான சமய, வாழ்க்கையில் ஒரளவு ஈடுபட்டிருந்திருப்பின் இவர்கள் இந்நிலையை அடைந்திரார். இவர்களுள் பெருங் கல்வி யாளர்களும், பி.எச்டி பட்டம் பெற்றவர்களும் உண்டு. எனவே இவர்களிடை அறிவுப் பஞ்சம் இல்லை. ஆனால் அந்த அறிவின் துணைகொண்டு அமைதியை அடைய முடியாமையின் இந்நிலை அடைந்தனர். ஆழ்ந்த கல்வி அறிவுடைய இவர்கட்கு பக்தி வழி ஒரு சிறிது இளமையில் கற்பிக்கப்பட்டிருப்பின் இந்த அவலநிலை ஏற்பட்டிராது என்பது திண்ணம். இப்பழக்கம் எவ்வாறு அவர்களிடை வந்தது என்பதையும் காண்டல் வேண்டும். அபின் முதலிய லாகிரிப் பொருள்களின் மூலம் நினைவு கடந்த உணர்வு நிலையை அடைய முடியுமா என்பது பற்றி மேனாடுகளைப் பொறுத்தமட்டில் சென்ற நூற்றாண்டிலிருந்தே சோதனைகள் நடைபெற்றன. லாகிரிப் பொருள்கள், மயக்கந் தரும் மருந்து நைட்டரஸ் -gãosivo (Nitrous Oxide or laughing gas) (pgaolu வற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உயர்நிலையை அடைய முயன்றுள்ளனர். பெஞ்சமின் பால் பிளட், (Benjamin Paul Blood) @#aarstan, 66ts fré (Xenos clerk), பல்வேறுபட்ட சமய அனுபவங்கள் (The varieties of "Religious experience) போன்ற பல நூல்களை எழுதிய வில்லியம் ஜேம்ஸ் (William James) போன்றவர்களும் இம்முறையைச் சோதனைக்காகக் கையாண்டுள்ளனர்.