பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் ' வில்லியம் ஜேம்ஸ் இச்சோதனையைத்தாமே நிகழ்த்தியதற். குரிய காரணத்தை இதோ பேசுகிறார். நாம் விழித்திருக் கும்போது தொழிற்படும் தற்போதம் (waking consciousness) நம்மிடம் உள்ள படிப்படியான பல்வேறு தற் போதங்களுள் ஒன்றாகும். இதனின்றும் முற்றிலும் மாறு பட்ட பல்வேறு தற்போத நிலைகள் அடுக்கடுக்காக ஒன்றுடன் ஒன்று மறைக்கப்பட்டு நம்மிடம் உள்ளன. இப்பல்வேறுபட்ட தற்போதங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உயிர்களைப் பற்றியும் அண்டங்கள் பற்றி யும் பேசுவது முழுத்தன்மை பெற்றதாகாது." இவ்வாறு செயற்கை வழிகளில் சென்று வில்லியம் ஜேம்ஸ் பெற்ற அனுபவத்தைப் பற்றியும் அவர் தம் நூலில் விரிவாக எழுதியுள்ளார் 'அலைகின்ற மனத்தை ஒரு வகையில் குவியச் செய்து முரண்பாட்டிடையே ஒர் ஒற்றுமையைக் காணவைப்பதேயாகும் இந்த அனுபவம். எதிர் எதிரானவைகளும் அவற்றிடையே ஏற்படும் முரண்பாட் டினால் நமக்கு ஏற்படும் தொல்லை களும் மறைந்து ஒர் ஒற்றுமை ஏற்படுவதுதான் இவ்வனுபவத்தின் உயிர் நாடியாகும். இவ்வனு பவங்கள் முரண்பட்டு ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருப்பதுபோலக் காணப்படினும் அவை உயாந்ததான ஒர் அனுபவத்தின் கூறுகளே என்பதையும் இம்முரண் 1. It is that our normal waking conciousness as we call it, is but one special type of conciousness, whilst all about it, parted from it by the filmiest of screens, there lie potential forms of conciousness entirely different. No account of the universe in its totality can be final which leaves other forms of conciousness quite disregarded. — The varieties of Religious Experience P. 378