பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இ. அ. ச. ஞானசம்பந்தன் பாடுகள் அனைத்தும் அப்பேரனுபவத்தில் சென்று சங்கம மாகி விடுகின்றன என்றும் அறிய முடிகிறது.! லாகிரி முறையில் உணர்வு நிலையை அடைந்து அந்த அனுபவத்தைப் பெற்று அனுபவித்து அதுபற்றி எழுத வந்த செனஸ் கிளார்க் (Xenos clerk) தத்துவத்தையும் இந்த அனுபவத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது அறிய வேண்டிய ஒன்றாகும். தருக்கம் வாழ்க்கையில் எவ்வித மான உந்தலையும் (Propulsion) தருவதில்லை. அதன் எதிராக உள்ள எடை வேகத்தை (momentum) மட்டுமே தருகிறது. வாழ்க்கை நடைபெறுவது ஏன் எனில் நடை பெற்றே ஆகவேண்டும். இதன் எதிராக உணர்வு நிலை (revelation) கூட்டுகிறது. அது ஏன் நடைபெறுகிறதென் றால் முன்னர் நடைபெற்ற இப்பொழுதும் நடைபெற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. உணர்வு நிலையில் நம்முடைய உட்புறத்தை (அகமுக நோக்கம்) காண முடிகிறது. சாதாரண தத்துவ அறிவு நாய் தன் வாலையே பிடிக்க முயல்வது போலாகும் எவ்வளவு வேகமாக நாய் சுற்றினாலும் அதே வேகத்தில் வாலும் ஒடி விடுகிறது. அதன் மூக்கு பின்னங்காலை அண்ட முடிவதே இல்லை. அதே போல நிகழ்வு (present) என்பதே 1. *The keynote of it is invariably a reconciliation. It is as if the opposites of the word, whose contradictoriness and conflict make all our difficulties and troubles, where melted into unity. Not only do they, as contrasted species, belong to one and the same genus, but one of the species, the nobler and better one, is itself the genus, and so soaks up and absorb its opposite into itself.” — Ibid P. 37.9