பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 9 161 எப்போதும் நாம் அதனை நெருங்கும்போது நிகழ்வாக இல்லாமல் இறப்பாக ஆகி விடுகிறது. இதன் எதிராக மயக்க நிலையிலிருந்து உலக வாழ்க்கை நிலைக்கு மீளும் அந்தக் கணத்தில் நிகழ்வை ஒருவாறு காண முடிகிறது.' இவற்றையெல்லாம் அறிந்தால் இன்றைய வாழ்க் கையில் வெறுப்படைந்து மேனாட்டு இளஞ்சமுதாயம் ஏன் மயக்க மருந்துகளின் உதவியை நாடிற்று என்பதை அறிய முடிகிறது. அபின், கஞ்சா முதலியவற்றை உபயோகித்து எளிய முறையில் உணர்வுலகத்தில் புகுந்து விட விரும்பும் அவர்களைக் கண்டு நம்மவருள் சிலர், பெரிய அறிவாளிகளாகத் தம்மை மதித்து கொள்வதால் எள்ளி நகையாடுகின்றனர். இது எள்ளி நகையாட வேண்டிய ஒரு நிகழ்ச்சியன்று என்பதைக் காட்டவே இது காறும் பேசப்பெற்றது. அவ்வாறானால் இப்பழக்கம் போற்றி ஏற்கப்பட வேண்டிய ஒன்றா என்ற வினாத் 1. The logic finds in life no propulsion, only a momentum. Hi goes because it is going. But the revelation adds; it goes because it is a and was a-going. You walk as it were round yourself in the revelation. Ordinary philosophy is like a hound hounting his own tail. The more he hints the farther he has to go, and his nose never catches up with his heels, because it is forever ahead of them. So the present is already a forgone conclusion, and I am ever too late to understand it. But at the moment of recovery from anesthesis, just then, before starting on life, I catch, so to speak, a glimpse of my heels, a glimpse of the eternal process just in the act of starting. . — Ibid - 380.