பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இ. அ. ச. ஞானசம்பந்தன் தோன்றலாம். உண்மையைக் கூற வேண்டுமானால் நல்ல அனுபவமுடைய குருமார்கள் பக்கத்தில் இருந்தால் சீடனுக்கு உணர்வுலகம் எவ்வாறு இருக்கும் என்பதன் கலவையை அறிவுறுத்த ஒருசில தடவைகட்கு மட்டும் இம்முறையைப் பயன்படுத்திவிட்டு அடுத்து இப்பழக்கம் நிலைக்காதபடி செய்து விடுவர். மேனாடுகளைப் பொறுத்தமட்டில் யாவரும் கிறிஸ்து சமயத்தைத் தழுவினார்கள் தாமே, இளமை முதற் கொண்டே சமய அறிவு பெற்றவர்கள் தாமே அப்படி இருக்க அவர்கட்குச் சமய அறிவு, ஒரளவு வழங்கப்பட்டி ருக்குமாயின் இந்நிலை வாராது என்று கூறுவது பொருந் துமா என்று சிலர் மனத்திலாதல் ஒர் ஐயம் தோன்றல் கூடும். இந்த ஐயம் நியாயமானதுதான். ஆனால் சமயம் என்ற பெயரில் என்ன வழங்கப்படுகிறது இன்று? அது எந்தச் சமயமாயினும் சில கிரியைகள், சடங்குகள் என்பவை தவிர இப்புதுயுக இளைஞனின் மனத்தே தோன்றும் ஐயத்தைப் போக்கி அவனை வழிக்குக் கொணரும் ஆற்றல் ஏறத்தாழ எந்தச் சமயத்தாரிடமும் இன்றில்லை. - - இளைஞர் ஏற்காதது ஏன்? இன்றைய இளைஞர் உள்ளம் அணுயுகத்தில் தோன்றி வளர்வது. நம்முடைய சமயங்கள் ஏறத்தாழ இரண் டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த நிலையில் தோன்றியன. ஆனால், எத்தனை யுகங்களாயினும் மாறாத சில இயல்புகளையும் இச் சமயங்கள் கொண்டுள்ளன. மிகப் பழைய நம்பிக்கைகள் சிலவற்றையும் இவை கொண்டுள்ள தம்முடைய காலத்தில் இருந்த பழைய நம்பிக்கைகளும் சடங்குகளும் கால வேறுபாட்டால் மாறும் இயல்புடையவை என்பதை ஏனோ இச்சமயங்கள் மறந்து விட்டன; ஏற்கவும் மறுக்கின்றன. அந்தச்