பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 108 சமயத்தின் உயிர்நாடியான கொள்கைகள் தவிர ஏனைய புறச் சடங்குகள் என்பதையும் மறந்துவிட்டமையால் தான் இன்று சமயம் என்றால் இளஞ் சமுதாயம் எள்ளி நகையாடும் நிலைவந்துவிட்டது. இது எல்லாச் சமயங் களுக்குப் பொதுவான குறைபாடேயாகும். கிறித்துவ சமயத்திற்கு மார்டின் லூதர் போன்றவர்கள் வந்து பழையன கழித்துப் புதியன புகுத்தியது உண்மையே. ஆனால் அதுவும் பன்னெடு நாட்களுக்கு முன்னர் நடந்த தாகலின் இன்று மறுபடியும் ஒதுக்க வேண்டியவை பல புகுந்து விட்டன. இந்நாட்டில் தோன்றி வளர்ந்த சமயங்களைப் பொறுத்த வரையும் மேலே கூறியவை உண்மையாகும். இராமானுஜரைப் போன்ற ஒரு வீரர் தோன்றி வைணவ சமயத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றிப் புதிய உற்சாகத்தை ஊட்டித் தொண்டக்குலம்’ என்ற ஒன்றை ஏற்படுத்தி ஒருவாறு வைணவ சமயத்தில் ஓர் உயிர்த் துடிப்பை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலையில் மிக முன்னேற்றத்துடன் இருக்க வேண்டிய அந்தச் சமயங்கூட நடமாடும் சக்தியுற்று வெறும் வேஷதாரி களுடன் நின்றுவிட்டது. சைவ சமயத்தைப்பொறுத்தவரை திருஞானசம்பந்தர் போன்ற புரட்சியாளர்கள் குப்பைகளை நீக்கிப் புத்துயிர் ஊட்டினர். சமயக் காழ்ப்பு மிகுந்திருந்த காலத்தில் தாயுமானவர் தோன்றிப் புறச்சமயங்களில் உள்ள சிறந்தவற்றை எடுத்து ஒன்றாக்கி (synthesised) சமரச சமயம் ஒன்றைத் தந்தார். அவரையடுத்துச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் சைவ சமயத்தில் சேர்ந்திருந்த குப்பைகளை நீக்கி அதற்குப் புத்துயிர் ஊட்ட முயன்றார். மேனாடுகளில் கிறித்துவ சமயத்தில் பல பிரிவுகளும் ஒன்றுகூட முயற்சிகள் நடை பெறுவது போல இந்நாட்டுச் சமயங்கள் பலவற்றையும்