பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் )ே 105. தான் இன்றைய உலகில் வாழ வழிகாட்டும் . ஆழ்ந்து சிந்தித்து முயன்றால் இது நடைபெறக் கூடியதே. அறிவின் பயனாகத் தோன்றிய எந்த இயக்கமும், மக்களைத் தரம் பிரித்து அவர்களுள் பல்வேறு நிலைகளை உண்டாக்கி வேறுபடுத்தியது. ஆனால் எத்துணை வேறு பாடு இருப்பினும் அவை அனைத்தையும் மறந்து இந்த வேறுபாடுகளின் இடையே ஒருமைப்பாட்டைக் காட்டி எல்லா மக்களையும் ஒன்றாக்கியது சமயம் ஒன்றேதான். உடையார், இல்லார்; தக்கார், தகாதார்; இளைஞர், முதியர்; அறிவுடையார், அஃது இலார் முதலிய அனைவ ரையும் ஒன்றாக்கி ஒரு சமுதாயம் வாழ வழி வகுத்தது யார்? உண்மையான சமயவாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்த அடியார்களும் பக்தர்களுமே இந்த ஒருமைப் டாட்டைக் கண்டு, பிறருக்கும் அறிவுறுத்தித் தாமும் கடைப் பிடித்தனர். தத்துவவாதி எத்துணைத் துாரம் முன்னேறினாலும் அவனுடைய அறிவும் ஆராய்ச்சி முறையும் தருக்கமும் பிரிவினையில் செல்லுமே தவிர ஒருமைப்பாட்டில் செல்வதில்லை. எனவேதான் உண்மைப் பக்தர்கள் உண்மைச் சமயவாதிகள் என்பவர்கள் மட்டுமே இதனை மேற்கொள்ள முடிந்தது என்று கூறு கிறோம். இவ்வாறு வேற்றுமையிடையே ஒருமைப்பாட்டைக் காண்பதற்குரிய சில அடிப்படையான இயல்புகள் பக்த, னிடம் அமைந்து விடுகின்றன. முதலாவது பக்தனின் தன்னலமின்மை அடியவர் எதனையும் தமக்கென ஏற்பதே இல்லை. காரணம் தான் என்ற ஒன்றே இல்லாதவர்க்குத் தனக்கென வேண்டப் படுவது ஒன்றும் இராது. இதனையே சேக்கிழார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் (பெ.பு. 143) என்றும் ஆடையும் கந்தையே (பெ.பு. 144) என்றும் கூறுவார். உண்மையான துறவி அவனுடன் யாழ் ஒன்று.