பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 0 அ. ச. ஞானசம்பந்தன் தவிர எதனையும் வைத்துக் கொள்வதில்லை (The true monk takes nothing with him but his lyre) sTGI DI இத்தாலிய பக்தர் ஒருவர் கூறினார். சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து முற்றிலும் நீங்கிய வர்களாகலின் கனிவு, கருணை என்பன இவர்களிடம் குடி கொள்கின்றன. பிற உயிர்கள் மாட்டுக் கருணையும், அவர்கள் துயரங்கண்டு கண்ணிர் விடுதலும் இவர்கட்கு இயல்பாகும். எல்லையற்ற உறுதியும், நம்பிக்கையும் கொண்டவர் களாதலின் அஞ்சாமை இவர்களிடம் குடிகொண்டு விடு கிறது. வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? (4-112-8) என்றும் அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை' (4-2-1)என்றும் கூறும் ஆற்றல் படைத்தவர்கள் நாவுக்கரசர் போன்ற பக்தர் களேயாவர். இந்த உறுதியின் மேல் பிறக்கின்றது கருணையாகலின் இது வேண்டியவர் வேண்டாதவர் என்ற பிரிவினைக்குள் அடங்குவதே இல்லை. இவர்கட்குப் பகைவர்கள் என்ப வர்களே கிடையாது. உயிர்களுள் எல்லாம் மிகத் தாழ்ந் திருப்பது தாமே என்ற எண்ணம் (humility) கொண்டவர் களாகலின் யாரையும், எத்தகைய கீழானவர்களையும் தாழ்ந்தவர், தகுதி இல்லாதவர் என்று இவர்கள் நினைப் பதே இல்லை. நம் போன்றவர் கண்டு வெறுப்படையும் நோயாளர் முதலியோரையும் பக்தர்கள் வெறுப்பதே இல்லை. இறைவன் திருவுளப்படியே நடைபெறுகின்றன; அவனன்றி ஓரளவும் அசையாது என்பதை வெறும் உதட்டளவில் அன்றி உண்மையிலேயே ஏற்றுக் கொள் கின்றார்கள் ஆதலின்பகைமை (enemity) காழ்ப்பு (malice) வெறுப்பு (hatred) என்பவை இவர்கள் பால் இருப்பதே இல்லை. யாவும் இறைவன் செயல் என்பதை வாழ்க் கையில் ஏற்றுக் கொண்டமையின் விடம் கலந்த உண