பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 107 வைத் தந்தபோதும், நீற்றறையில் இட்டபோதும்கல்லுடன் கட்டிக் கடலில் இட்டபோதும் திருநாவுக்கரசர் போன் றார்க்கு இவற்றைச் செய்தவர்மேல் எத்தகைய வெறுப்போ, காழ்ப்போ வந்ததே கிடையாது. தம் உடலுக்கு ஏற்படும் நோவை இவர்கள் அறிவதே இல்லை; ஒருவேளை அறிந்தாலும் அதனை நெஞ்சு உரத் தோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். தான் என்ற அகங்கா ரமும் எனது என்ற மமகாரமும் உடையாருக்குத்தானே தம் உடம்பு அதில் ஏற்படும் நோய் என்பவை தெரியும். வேண்டத் தக்கது அறிவோம் நீ! வேண்ட முழுதும் தரு வோய் நீ (குழைத்த-6) என்று கூறுகிறார் மணிவாசகர். "என்னை வருத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே? (4.105-2) என்கிறார் நாவரசர். இக்கருத்தை அப்படியே மொழி பெயர்த்துக் கூறுவது போல பாஸ்கல் (Pascal) என்ற பிரஞ்சுநாட்டு பக்தர் இதோ கூறுகிறார். ஆண்டவனே என்னுடையதன்னலம் காரணமாக எனக்கு ஏற்படும் இடுக்கண்களைத் தாங்கிக் கொண்டு வருந்தாமல் இருக்கும் மனநிலையைத் தருவா யாக! நின்னிடம் நலம், நோய், வாழ்வு, சாவு என்ற எதையும் நான் கேட்கவில்லை. நின் புகழ் ஓங்குதற்காக நலமோ நோயோ, சாவோ வாழ்வோ எதை வேண்டுமா னாலும் எனக்கு அருளுக எனக்கு எது நலம் பயப்பது என்பதை நீயே அறிவாய்; நீயே தலைவன்; நீ விரும்பி யதை எனக்கு அருளுவாயாக'." - - 1. “Desiver me, Lord, from the sadness at my proper suffering which self-love might give, H ask you neither for health nor for sickness, for life no death; but that you may dispose of my health and my sickness; my life and my death, for your glory. You alone know what is expedient for me; you one the soverign master, do with me according to your will." — The varieties of Religious Experience. P. 280