பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108.0 அ. ச. ஞானசம்பந்தன் - தங்கள் உடலுக்கு ஏற்படும் நோய் முதலிய பற்றிக் கவலைப்படாமல் இருப்பது போல தங்கள் வாழ்வில் செய்கின்ற செயல்கட்கும் இறைவனே காரணமாகிறான். என்ற முடிவில் இருப்பவர்கள். இன்னுங் கூறவேண்டுமா னால் அவனை வணங்குதலாகிய செயல்கூடத் தாம் தம் முயற்சியால் செய்வது என்று நினையாமல் அவன் அருள் காரணமாகவே நடைபெறுகிறது என்று நம்புகின்ற வர்கள். 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' (சிவ.) என்பது திருவாசகம் தம்மிடம் காணப்பெறும் குற்றங்கள் நீங்க வேண்டுமானாற் கூட அதுவும் அவன் திருவருளாலேயேதான் நடைபெற வேண்டும் என்று கருதினர். குலங் களைத்தாய் களைந்தாய் என்னைக் குற்றம் (நீத்தல்-291 என்பது திருவாசகம். தனித்துணை நீ நிற்க யான் தருக்கித் தலையால் நடந்த வினைத்துணை யேன்" (நீத்தல்-39) என்பதும் திருவாசகமே. திருவாசகத்திற் காணப்பெறுகின்ற இம்மூன்று கருத்துகளும் மணிவாசகருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. சுந்தரமூர்த்திகளிடத்தும் இக்கருத்துகளின் எதிரொலியைக் காணலாம். மேனாட்டு பக்தர் கூட்டத்தில் ஒருவராகிய ஸ்தாபிட்ஸ்' (Stampitz) என் பார் கூறுவன ஈண்டு ஒப்பு நோக்கத் தகுந்ததாம். 'இன்றுள்ள நிலையில் இருந்து இன்னும் உயர்ந்த மனித -னாக ஆகிவிடுவேன் என்று கடவுளின் எதிரே ஆயிரம் முறை சத்தியஞ்செய்துள்ளேன்; ஆனால் அதன்படி யான் நடந்து கொண்டேனில்லை. இனி அத்தகைய சத்தியம் ஒன்றும் செய்யமாட்டேன். ஏனெனில் அதனை நிறை வேற்ற எனக்கு ஆற்றல் இல்லை என்பதை அனுபவமூலம் அறிந்து கொண்டேன். எனவே இறைவன் அதனை விரும்பி அருளினாலொழிய யான் எத்துணை சத்தியஞ்