பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 3 அச்சமே ஆதி காரணம் : - மிகப் பழைய காலத்தில் கடவுள் பற்றிய எண்ணம் மனிதனிடம் தோன்றக் காரணமாய் இருந்தது. அச்சமே' என்று கூறுவதில் தவறு இல்லை. ஆதியில் தெய்வ பக்திக்குக் காரணமாக இருந்த இவ்வச்சம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகியும், மனிதனுடைய அறிவு மிகமிக வளர்ந்த நிலையிலுங்கூட அவனை விடவில்லை என்று நினைக்க வேண்டியுளது. இது கருதியே போலும் அனுபவத்தில் பழுத்தவரும், மனித இயல்பை நன்கு அறிந் தவருமாகிய நாவுக்கரசர் பெருமான். 'அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும் நெஞ்சம் வாழி நினைநின்றி ஊரை நீ" (திரு. 5-23-91 என்று பாடிச் செல்கின்றார். மனித அறிவு முழு வளர்ச்சி பெறாத நிலையில் தெய்வபக்தி தோன்றுவதற்குக் காரண மாக அச்சம் இருப்பதை நம்மவர் மறுக்கவில்லை. ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த ஒருவன் அச்சங் காரணமாகப் பக்தி செய்வாரேயானால் அது விரும்பத் தகுந்ததன்று. இளங் குழந்தை நடை பழகத் தள்ளுவண்டியின் உதவியை நாடல் சரியே; ஆனால் குமரப் பருவத்திலும் தள்ளுவண்டியை விரும்பினால் அது வெறுத்து ஒதுக்கப் பட வேண்டிய ஒன்றாகும். - அச்சமும் தேவை : பல சமயங்களில் அச்சம் என்பது மனிதனுக்குத் தேவைப்படுகின்ற ஒன்றாகும். காரணங் கூற முடியாத முறையில் அமைந்துள்ள ஒரு சிலவற்றை மனிதன செய்தல் கூடாது என்று கண்ட நம் முன்னோர் அதன் காரண காரியங்களை எடுத்து விளக்கிக் கூறாமல் அதன மாட்டு ஓர் அச்சத்தை உண்டாக்கி விட்டு விட்டனர். எத்துணைக் காலமாயினும் அதில் உள்ள உண்மை மாறுவதில்லை. மின்சாரம் செல்லும் கம்பிகளைத்