பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 @ *. ச. ஞானசம்பந்தன் பெருகுமாறு செய்தது அதைவிட வியப்புத் தருகின்ற ஒன்றாகும். ஏன் விலங்குகளை வேட்டையாடும் பழக்க முடைய அவன் கருவிகளைக் கொண்டு விலங்குகளைக் குத்தி அவற்றின் உடம்பிலிருந்து குருதி பெருகுமாறு செய்திருக்கிறான். அதனால் விலங்குகளைவிடத் தான் சக்தி வாய்ந்தவன் என்ற எண்ணம் அவன் மனத்தில் தோன்றி இருக்கலாம். இப்பொழுது மரங்கள் தன் உடம்பைக் குத்திஇரத்தம் பெருகுமாறு செய்து விட்டன எனின் மரங்கள் தன்னை விடச் சக்தி வாய்ந்தவை என எண்ணத் தொடங்கினான் போலும் ஆதிமனிதன்! அதன் பயனாக மரத்தை வனங் கினான்! காட்டுப் பாதையில் நடந்து சென்ற அவன் கால் களை அங்கு கிடந்த கல் பதம் பார்த்துவிட்டது! அப்பொழுது ஆதிமனிதன் குனிந்து அக்கல்லை வணங்கினான். மரங்களில் எல்லாம் சங்கிலிக் கறுப்பனையும், தெரு. வில் கிடக்கின்ற கற்களில் எல்லாம் முனியனையும் கண்டு வழிபடும் பழக்கம் இப்படித்தான் ஆதிநாளில் தோன்றி. இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டுக் கிராமங்களில் எப். பகுதியில் சென்றாலும் மரங்களில் கட்டிய சங்கிலிகளுடன், 'சங்கிலிக்கறுப்பனையும் தெருச்சந்துகளில் பாதி புதைந்த, கற்கள் எண்ணெய் முழுக்குப் பெற்று மலர்களுடன், முனிஸ்வரன்களாக விளங்குவதையும் காணலாம். இதில் ஒரு வியப்பு என்ன எனில், மிகப் பிற்காலத்தில், மனித அறிவும் தத்துவமும் வளர்ந்துவிட்ட காலத்தில்தான், இறைவனுடைய தத்துவம் நன்கு அறியப்பட்ட காலத்தில் தான் யாண்டும், எதிலும் இறைவனே உள்ளான் என்ற கருத்துப் பரவியது. சர்வம் பிரம மயம் ஜகத்' என்ற. வாக்கியம் தோன்றுதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பே கற்கால மனிதன் மரத்திலும், தெருக் கல்லிலும். கடவுளைக் காண முற்பட்டது ஒரு புதுமைதான்.