பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அ. ச. ஞானசம்பந்தன் உடலுக்குத் தலைவனாக மனம் இருத்தவின் மனத்தை அடக்கினாலொழியப் பொறிபுலன் அடக்கம் பயனற்றது என்பதை அவர்களும் அறியத் தொடங்கி விட்டமையின் அமைதியான வாழ்வு (Peaceful life) வேண்டும் என்று கூறுகின்றனர். வெறும் பொறி அடக்கம் பயன் தராது: பொறிகளை அடக்குவது என்பது இயற்கையை எதிர்த்துச் செய்யும் போராட்டம் என்பதையும், அதனால் எவ்வித நற்பயனும் விளைவதில்லை என்பதையும் திருமூலர் அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார், அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை என்று கூறிப் போனார். இன்று பணம் பெருத்த நாடாகிய அமெரிக்கா வில் தோன்றி வளரும் புதிய கூட்டம் எது என்று நினைக் கிறீர்கள்? ஹிப்பிகள்' எனப் பெறும் கூட்டத்தார் பலரும் பெருஞ் செல்வர்வீட்டுப் பிள்ளைகள். செல்வத்தால் மட்டும் அமைதி அடைய முடியவில்லை என்பதனைக் கண்ட அவர்கள் பல்வேறு செயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி மனஅமைதியைத் தேட முனைந்தனர். அவ் வழியிலும் அமைதி கிட்டாமற் போகவே நியூயார்க்' நகரிலும் சிக்காகோ நகரிலும் தலையை மொட்டை அடித்துக்கொண்டு தெருவில் கிருஷ்ண பஜனை செய்து: கொண்டு ஊர் சுற்றி வருகின்றனர். இதன் அடிப்படையாதாக இருக்கும் என்று யாரேனும் சைவர்கள் என்று மார்தட்டி கொள்பவர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பொறிகளையும் புலன்களை யும் படைத்த இறைவன் பையத்தியக்காரன் அல்லனே! பொறிகளைப் படைத்து இவற்றால் அனுபவிக்கப்படும் பொருள்களாகிய தனு, கரண புவன போகங்களையும் படைத்துக் கொடுத்தபிறகு இவற்றால் அவற்றை அனுபவிக்கக் கூடாது என்பது என்ன அறிவுடைமை