பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 119 பும் கெடுத்துத் தானும் கெடுகிறதன்றோ? அதேபோல உடம்பெடுத்ததன் பயன் பிறர் பொருட்டு பயன்படுதற் காக ஆனால் அப்பயன் விளையாதபொழுது அந்த உடம்பு பாரமாகி விடுகிறது. உடம்பை வளர்ப்பது எப்போது? திடம்பட மெய்ஞானம் சேரும் வழிக்கு உடம்பு உதவியாக இருக்கும் பொழுது. மைந்தன் நல்லனவற்றைச் செய்யும் பொழுது அவனைப் போற்றும் அதே தந்தை அவன் தவறு செய்த பொழுது இடித்துரைத்தல் போல உடம்பை ஒரு முறை போற்றியும் மற்றோர் முறை தூற்றியும் பாடுகின்றார் பெரியார். உடம்பை வைத்துக்கொண்டு பயன்படுத்தும் வழிபற்றிப் பலர் கொண்டுள்ள தவறான கருத்தையும் சாடுகின்றார். ஒரு சிலர் ஆசனம் இட்டுப் பிராணாயாமம் செய்துவிடுவதால் பெரும்பயனை அடைந்துவிடலாம் என்று நினைப்பதை எள்ளி நகையாடுமுகமாக ஒரு கருங்கல் எண்ணாயிரம் ஆண்டு நீருள் கிடப்பினும் ஒரு சொட்டு நீரையும் உறிஞ்சாததுபோல இத்தகைய சித்தி களால் எவ்விதப் பயனுமில்லை என்கிறார். மெய்யுணர்வு வாய்க்கப்பெறாமல் பொறிபுலன்களை அடக்கிப் பழகு வதால் எப்பயனும் விளையாது என்ற பேருண்மையைக் கூறுகிறார். இதே கருத்தை வள்ளுவப் பெருந்தகையும், 'ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லாதவர்க்கு' என்று கூறுகிறார். விஞ்ஞானத்தின் துணைகொண்டு புற உலகில் முன்னேறியுள்ள மேலைநாட்டார் இன்று தம் அனுபவ மூலம் கண்டுள்ள புதுமை இதுவாகும். எத்துணை வசதி படைத்திருப்பினும் செல்வத்திற் புரண்டாலும் மன வாழ்வு நிரம்பாவிட்டால் எஞ்சுவது வெறுமையேயாகும் என்பதை அவர்கள் அறியத் தலைப்பட்டு, பின்னர் மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலிடுபட்டு அதன் பின்னரே மனத்துக்கும் உடலுக்குமுள்ள தொடர்பை ஆய்ந்தனர்.