பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 0 அ. ச. ஞானசம்பந்தன் உடம்பின் பயன் : இனி யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை செல்வ நிலையாமை என்பன பற்றியும் அரசன் செங்கோல் என்பவை பற்றியும் பேசியமையாலும் இவ்வுலக வாழ்க் கையாகிய புறவாழ்க்கை நன்கு அமைய வேண்டிய சூழ் நிலையைப் பேசியுள்ளார். அவ்வாறு இல்லாவிடின் திரி புரைசக்கரம் முதலிய மந்திர மறைப் பொருள்களைப் பற்றிப் பேசவந்த அவர் நிலையாமை முதலியவற்றைப் பேசுவானேன்? நம்மாட்டுக் கொண்ட கருணையால் நம்மைத் தட் டி எழுப்பவே இவற்றை எல்லாம் பாடினார் என்பதே பொருத்தமாகும். ஒன்றுக் கொன்று முரணாகக் காணக்கூடியவற்றைக் கூட இவர் பேசியுள்ளார். ஒரு பாடவில் உடம்பின் இழிவைக் இறப்புகுந்து பானை உடைந்தாலும் ஓடாவது எஞ்சும். உடம்பிலுள்ள உயிர் பிரிந்தால் இறைப்போதும் அதனை வைத்திருக்கமாட் டோம்' என்று பேசும் அவரே, 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே' என்றும் பாடுவது என் கருதி ? நம்மிடத்தில் ஒரு பொருள் கொடுக்கப்பட்டால் அத னைப் பயன்படுத்த வேண்டிய முறையிற் பயன்படுத்த வேண்டும். இன்றேல் அப்பொருள் தோன்றிய நோக்கமும் கெட்டு நம்மிடம் வந்து சேர்ந்ததன் பயனையும் இழக் கிறது. செல்வம் என்பது பிறர் துயரந்துடைக்கப் பயன் படல் வேண்டும். செல்வத்துப் பயனே ஈதல் என்று பேசிச் செல்கிறது. பழைய புறநானூறு. ஆனால் அதே செல்வம் தகுதி இல்லாதவர் மாட்டுச் சிக்கிக் கொண்டால் அவனை