பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 117 உண்டு. இறைவன் உயிர்களினின்று வேறானவன் என்று இவர்கள் கருதவே இல்லை. அதனால்தான் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறினர். திருமூலர், "படமாடுங் கோயில் பரமற்கொன்று ஈயின் நடமாடுங் கோயில் நம்பார்க்கங்கு ஆகா நடமாடுங் கோயில் நம்பர்க்கொன்று ஈயின் படுமாடுங் கோயில் பரமற்கங்கு ஆமே' என்றும், 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்' என்றும் கூறுமுகமாக இதனை வலியுறுத்திப் போனார். உலகியலிற்கூட ஒரு தாய்க்கு ஒரு பொருளைத் தருதலினும் அவளுடைய குழந்தைகட்கு அதனைத் தருவது மூலம் அத்தாயின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க முடியும். அதேபோல உயிர்கட்குச் செய்யு உதவி கண்டு யாவர்க் குந்தாயாகிய இறைவனும் மகிழ்கிறான். குழந்தை மகிழக் கூடிய சிறிய பொருளைத்தரினும் அக் குழந்தையின் மகிழ்ச்சி கண்டு தாயும் மகிழ்கிறாள். ஆனால் அதே பொருளை நேரிடையாகத் தாய்க்குத்தரின் அச் சிறிய பொருளை ஏற்ற அவள் மகிழ்ச்சி அடைவாளா என்பது ஐயத்திற்குரியது. அதேபோல இறைவன்மாட்டு உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் அர்ப்பணித்து அன்பு செய்ய வேண்டும்.அது இத்துணை எளியதுமன்று.ஆனால் உயிர்கட்குத் தொண்டு செய்ய இத்துணைப்பாடு பட வேண்டா. என்றாலும் இறைவன் அதில் மகிழ்கிறான். இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்த மூலர் இதனை மேலே கண்ட பாடலில் எடுத்துக் கூறுகிறார்.